dinamalar telegram
Advertisement

லண்டன் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

Share

லண்டன் ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத மண்டல பூஜை நவம்பர் 16 ம் தேதி நடைபெற்று வருகிறது. மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய மண்டப பூஜையுடன், கந்தசஷ்டி விழாவும் சிறப்பாக நடைபெற்றது. மண்டல திருவிழா மற்றும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சுவாமி ஐயப்பன் மற்றும் வள்ளி–தெய்வசேனா சமேத முருகப் பெருமானுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் மாலையில் சுவாமி ஐயப்பன், புலி வாகனத்தில் எழுந்தருளி, ஆலய வலம் வந்து அருள்பாலித்தார். கோவிட் 19 கட்டுப்பாடகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தால், மண்டல பூஜை நிகழ்வுகள் அனைத்தும் கோயிலின் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement