LOGIN
dinamalar telegram
Advertisement

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது

Share

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் டி.என்.இமாஜான் மற்றும் மில்லத் அஹமது ஆகியோருக்கு வாஷிங்டன் மேரி லேண்ட் உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் சிறந்த நூற்களுக்கான அறிவொளி விருதும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கவுரவித்துள்ளது. டி.என்.இமாஜான் எழுதிய “ பள்ளிக்கூடச் சிரிப்புகள் “ என்ற நகைச்சுவை நூலுக்கும் “ எள்ளலான லிமரைக்கூ கவிதைகள் நூற்களுக்கு விருது கிடைத்துள்ளன. இவர் இருநூற்றுக்கு மேற்பட்ட தமிழ் நூற்களையும் நான்கு ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது. மில்லத் அஹ்மது படைத்த “ சிங்கப்பூரில் சரவணன் “ என்ற முதல் புதினமே விருது பெற்று புகழ் படைத்தது. இது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2016 ஆம் ஆண்டு நடத்திய குறுநாவல் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்றது. இந்நூற்களை சென்னை மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 15 எழுத்தாளர்களின் நூல்களும் விருது பெற்றன. விருது வழங்கும் விழா அக்டோபர் 10 ஆம் தேதி குற்றாலத்தில் ஐந்தருவி விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத் தலைவர் முனைவர் செல்வின்குமார் தலைமை வகித்து படைப்பாளர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் வாழ்த்துரை ஆற்றினார். பொறியாளர் செல்வி.பவித்ரா நிகழ்வினை நெறிப்படுத்தினார். தற்போதைய கொவிட் 19 சூழலால் சிங்கப்பூர் படைப்பாளர்கள் நேரில் பெற்றுக் கொள்ள இயலவில்லை.


– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement