LOGIN
dinamalar telegram
Advertisement

கோவிட் 19 காலத்தில் கலைச்சேவையாற்றிய சிங்கப்பூர் ஸ்ரீ சக்தி பைன் ஆர்ட்ஸ்

Share

ஸ்ரீ சக்தி பைன் ஆர்ட்ஸ் சிங்கப்பூரின் பிரபல நாட்டியப் பள்ளி. இதிலிருந்து பல நாட்டிய தாரகைகள் உருவாகி உள்ளனர். கோவிட் 19 பெருந் தொற்றுக் காலத்தில் தனிமைப் படுத்தப்பட்ட இந்தியத் தொழிலாளர்களை மகிழ்விக்க வாரம் தோறும் கலை நிகழ்ச்சிகள் படைத்து சேவை ஆற்றியமை எல்லோரது பாராட்டையும் பெற்றது.

சக்தி பைன் ஆர்ட்ஸ் சார்பில் மே 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் திருமதி. தேவி வீரப்பன் மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 12 ம் தேதியன்று அச்சம் தவிர் என்ற தலைப்பில் திருமனூர் சகோதரர்களின் மங்கள இசை நிகழ்ச்சியும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஜூலை 18 அன்று ஞிமிரென இன்புறு என்ற தலைப்பில் சிங்கப்பூர் கல்பவிருக்ஷா பைன் ஆர்ட்ஸ் சார்பில் மீரா பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மாணவர்கள் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஜூலை 25 அன்று பாட்டினில் அன்பு செய் என்ற தலைப்பில் கிராமப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த வேலவன் கும்மி ஆய்வு மையத்தின் வள்ளி கும்மி ஆட்ட குழுவினரின் கும்மியாட்டம், தெருக்கூத்து, கலைமாமணி பாரதி திருமகன் குழுவினரின் வில்லுப்பாட்டு ஆகியன நடைபெற்றது. ஆகஸ்ட் 22 அன்று பெரிதினும் பெரிது கேள் என்ற தலைப்பில் சிங்கப்பூர் அம்பா காமாட்ஷி கர்நாடக இசை பள்ளி மாணவர்களின் தொடர் இசைக் கச்சேரி இடம்பெற்றது.


ஆகஸ்ட் 29 அன்று கூடித் தொழில் செய் என்ற தலைப்பில் சிங்கப்பூர் திருமதி காயத்ரி கார்த்திக் மாணவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, சிங்கப்பூர் திருமதி.ஸ்வர்ணவர்ஷாவின் ஸ்வர்ண கலா மந்திர் மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றது. செப்., 20 ம் தேதி ஞேயங் காத்தல் செய் என்ற தலைப்பில் கலிபோர்னியா–ஃபிரிமன்ட் ஸ்ருதி கலை பள்ளியை சேர்ந்த திருமதி சரண்யா கணேசன் மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், அனைவரும் கண்ட களிக்கும் வகையில் ஸ்ரீசக்தி பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. மெய்நிகர் நிகழ்வாக நடத்தப்பட்ட இந்த கலை நிகழ்ச்சிகளை அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசித்தனர். கோவிட் 19 நெருக்கடி காலத்திலும் இடைவிடாது கலைச்சேவை ஆற்றிய ஸ்ரீ சக்தி பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தினரை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.

– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement