Advertisement

மௌலானா ரூமியின் அற்புத இலக்கியம் – மஸ்னவி என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி

Share

துபாய் : மௌலானா ரூமியின் அற்புத இலக்கியம் – மஸ்னவி என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி 11.09.2020 வெள்ளிக்கிழமை மாலை இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் ஜூம் மெய்நிகர் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் முனைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் அப்துஸ் சமத் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

மஸ்னவீ ஷரீஃப் தமிழாக்கத்தின் வெளியீட்டாளர் மவுலவி டி.எஸ்.ஏ. அபுதாஹிர் பஹீமி மஹ்ழரி வரவேற்புரை நிகழ்த்தினார். துபை சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ. முஹம்மது மஃரூப் மௌலானா ரூமியின் அற்புத இலக்கியம் – மஸ்னவி என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் அமீரக ஊடக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் பொருளாளர் எஸ்.எஸ். ஷாஜஹான், துணைச் செயலாளர் முனைவர் மு.இ. அஹமது மரைக்காயர், திண்டுக்கல் ஜமால் முஹைதீன், கவிஞர் அத்தாவுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement