Advertisement

மலேசியாவிலிருந்து அகில உலக யோகா சாதனையாளர் விருது தேர்வு

Share

இந்தியாவில் உள்ள பதஞ்சலி யோகா கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் 2020 ஆம் ஆண்டிற்கான யோகா சாதனையாளர்களுக்கான தேர்வு விண்ணப்பங்களை உலகம் முழுவதும் உள்ள யோகா ஆசிரியர்களிடம் இருந்து பெற்றனர். அதில் மலேசியா நாட்டில் இருந்து

1. சபா மாநிலம் சண்டாகாண் நகரை சேர்ந்த ஹேமாமாலினி சாமிநாதன் - யோகா ஸ்ரீ விருதிற்கும்

2.. கெடா மாநிலம் சுங்கை பட்டாணி நகரை சேர்ந்த அமுதா கௌரப்பன் - யோகாபாரதி விருதிற்கும்

3. விலாயா பெர்சகெட்டுவான் மாநிலம் கோலாலம்பூர் நகரை சேர்ந்த சிந்தாமணிஅருணாசலம் - யோகா பாரதி விருதிற்கும்

4. சிலாங்கூர் மாநிலம் காஜாங் நகரை சேர்ந்த வாசுகி ராமன் - யோகா ஜோதி விருதிற்கும் தேர்வு பெற்றுள்ளனர்.

பாரதி கண்ட புதுமைப் பெண்களாக யோகா துறையில் ஆண்களூக்கு நிகராக அகில உலக யோகா போட்டியில் பங்கு பெற்று பதக்கங்கள் பெற்றதாலும், தேசிய அளவில் யோகா போட்டிகளை மலேசிய நாட்டில் நடத்தி சாதனை புரிந்ததற்காகவும், அகில உலக யோகா மாநாட்டில் பங்கு பெற்றதற்காகவும்,அதிக அளவில் யோகா போட்டியில் போட்டியாளர்களை பங்கெடுக்க ஏற்பாடு செய்ததற்காகவும் இவர்கள் இந்த கௌரவ விருதிற்கு தேர்வு பெற்றுள்ளனர்.

இவ் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள அகில உலக இணைய தள கூட்டதில் வழங்கப் படுகிறது. இவ்விருதிற்கு தேர்ச்சி பெற்றவர்களை அகில உலக யோக சம்மேளன ஆசிய இயக்குனர் ராதா கிருஷ்ணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பதஞ்சலி யோகா கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் 2020 ஆம் ஆண்டிற்கான Yoga Acharya award ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு இரண்டாவதாக வழங்கப்பட்டுள்ளது. யோகா போட்டி அஷ்டாங்க யோகா அமுதா வென்றார். ஷிவ் தர்ஷன் யோகா வித்யாலயா சார்பில் சுவாமி சிவானந்த சரஸ்வதி ஜெயந்தி முன்னிட்டு யோகா போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். போட்டியாளர்களின் மலேசிய கெடா பகுதியை சார்ந்த அஷ்டாங்க யோகா பயிற்சி மையத்தின் யோகா ஆசிரியர் அமுதா கலந்துகொண்டு பெண்களுக்கான பிரிவில் CHAMPIONS OF CHAMPIONS பட்டம் வென்றார்.

– நமது செய்தியாளர் வெங்கடேசன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement