Advertisement

துபாயில் ஆனந்தச் சிரிப்பு ! ஆரோக்கிய வாழ்வு !! சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி

Share

துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ஆனந்தச் சிரிப்பு ! ஆரோக்கிய வாழ்வு !! என்ற சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி 04.09.2020 வெள்ளிக்கிழமை மாலை ஜூம் காணொலி வழியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி இசாக் தலைமை வகித்தார். ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் சிறப்புச் சொற்பொழிவாளர் தேவகோட்டை இராமநாதன் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.

ஆனந்தச் சிரிப்பு ! ஆரோக்கிய வாழ்வு !! என்ற தலைப்பில் இளைய தமிழ்க் கடல் தேவகோட்டை இராமநாதன் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஆசிரியர் தினம் குறித்து மதுரை பேராசிரியை கோதை ஈஸ்வரி வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எமிரேட்ஸ் அலாவுதீன், மன்னர் மன்னன், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது மைதீன், திண்டுக்கல் ஜமால் முகைதீன், காயல் லெப்பை தம்பி, சோமசுந்தரம் ராமநாதன், பாலு நமசிவாயம், இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
--- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement