Advertisement

தமிழ் தம்பதிக்கு கனடா நாட்டின் விருது

Share

தமிழகத்தில் செட்டிநாட்டை பூர்வீகமாக கொண்டு, மதுரையில் பிறந்த திரு.வள்ளிக்கண்ணன் மருதப்பன் கனடாநாட்டின் பதிவு செய்த லாப நோக்கமற்ற கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் சேர்மனாக இருந்து வருகிறார். இவர்., கொரோனா பேரிடர் காலத்தில் தமிழ் நாட்டு நடனக் கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் மற்றும் மேடை இசைக் கலைஞர்களுக்காக YouTube நிகழ்ச்சி செய்து பண உதவி செய்ததோடு, இவரது மனைவி திருமதி பார்வதி வள்ளிக்கண்ணன் அங்கு ஊரடங்கு காலத்தில் தவித்த மாணவர்களுக்கு சுமார் 10 வாரங்கள், 40க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு விநியோகம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர். இவர்களின் இந்த சேவையை கவுரவிக்கும் விதமாக சிறந்த தமிழ் மற்றும் சமுதாயப் பணிக்காக தமிழன்பன் 80 வாழ்நாள் சாதனையாளர் விருது மனிதத்தேனீ பட்டம் போன்றவற்றை பெற்ற திரு.வள்ளிகண்ணன் மருதப்பன் மற்றும் அவரது மனைவி திருமதி பார்வதி வள்ளிக்கண்ணன் இருவரையும் STA EVENTS மற்றும் SUPREME GROUP OF COMPANYS KUWAIT இணைந்து கனடா நாட்டின் Real HEROES of COVID 19 எனும் விருது வழங்கி பாராட்டி உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement