Advertisement

ஜித்தாவில் ரத்த தான முகாம்

Share

ஜித்தாவிலுள்ள கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையில் 24-07-2020 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய இந்த முகாமில் 60 பேர் கலந்து கொண்டனர். அதில் 51 பேரிடமிருந்து இரத்ததானம் பெறப்பட்டது. கோவிட் 19 வைரஸால் மருத்துவமனைக்கு வர மக்கள் தயங்குவதால் நோயாளிகளின் உயிர்காக்க இரத்ததானம் செய்து உதவுங்கள் என்று கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையிலிருந்து வந்த வேண்டுகோளை ஏற்று ஜித்தா தவ்ஹீத் ஜமாஅத் இரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்தது.
தொற்று நோய் பரவும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் மருத்துவமனைக்கு வர மக்கள் தயங்குவது, அதிகமான கம்பெனிகளில் பணியாளர்கள் வெளியே செல்ல அனுமதியில்லாத நிலை, பாதுகாப்பு பரிசோதனை மற்றும் சுகாதார கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் இந்நேரத்தில் இரத்ததான முகாம் நடத்துவது மிகப்பெரும் சவாலாகும். இருப்பினும் நோயாளிகளின் உயிரை காக்க அவசர நிலையில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முக கவசம் அணிதல் சோஷியல் டிஸ்டன்ஸ், சேனிடைசர் பயன்படுத்துதல், உடல்நலக்குறைவு உள்ளவர்களை தவிர்த்தல், உடல் வெப்பநிலை பரிசோதனை போன்ற ஆரம்பநிலை நடவடிக்கைகளுக்கு பிறகு கொடையாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இதில் 60 பேர் கலந்து கொண்டனர், அவர்களில் 51 பேரிடமிருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டது.
மதியம் 2.00 மணிக்கு துவங்கிய இம்முகாம், தவ்ஹீத் ஜமாஅத்தின் தன்னார்வ தொண்டர்களின் வழிகாட்டுதலில் மாலை 4.30 க்கு நிறைவுக்கு வந்தது. வந்தவர்களை பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சேர்க்கும் பொறுப்பையும் அவர்கள் சிறப்புடன் செய்தனர். டாக்டர்.அய்மன் தலைமையிலான இரத்ததான வங்கி குழுவினர் கொடையாளிகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர். இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல தலைவர். முஹம்மது முனாஃப் பேசும் போது, தேவைப்படும் போதெல்லாம் அவசரகட்டமாக எல்லாநேரத்திலும் இரத்ததானம் செய்து வருகின்றோம். ஜித்தா மண்டலம் நடத்திய முகாம்களில் இது 21 வது இரத்ததான முகாமாகும் என்று குறிப்பிட்டார்.

- தினமலர் வாசகர் முஹம்மது மாஹீன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement