Advertisement

ராசல் கைமாவில் இருந்து சிறப்பு விமானத்தில் தமிழர்கள்

Share

ராசல் கைமா: உலக மக்களின் வாழ்க்கை முறையை புரட்டிப் போட்ட கொடிய நோய் கொரோனா பரவல் பாதிப்பால் அல்லல்படும் அயலகத் தமிழர்களை,இன்னும் சொல்லப் போனால் அயலக இந்தியர்களை தாயகம் கொண்டு சேர்க்கும் தியாகப் பணியில் ஈடுபட்டிருப்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மட்டுமே. அதன் அயலக அமைப்பான அமீரக காயிதே மில்லத் பேரவை அதை தமிழர்களுக்காக முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது.

அமீரக காயிதே மில்லத் பேரவையும்,துபாய் KMCC யும் இணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முனீருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஸாஹிப் அவர்களின் ஆலோசனையின்படி பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் சாஹிப், நாடாளுமன்ற கொறடா ஜனாப்.நவாஸ் கனி சாஹிப் ஆகியோரது வழிகாட்டுதலில் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் அமீரகத் தமிழர்களை தமிழ்நாடு, கேரளா வழித்தடங்களில் அடுத்தடுத்து தனி விமானங்கள் மூலம் கணிசமானோர் தாய் தமிழகம் சென்றடைந்தனர.

பேரவையின் பொருளாளர் மற்றும் நிர்வாகச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, பேரவை துணைப் பொதுச் செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி ஆகியோர் பயணத் திட்டங்களை ஒருங்கிணைக்க, பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பட்டியல்களை பேரவை ஊடகப் பிரிவு செயலாளர் சொக்கம்பட்டி முஹம்மது கபீர், மக்கள் தொடர்புச் செயலாளர் மற்றும் துபாய் மண்டல துணைச் செயலாளர் முத்தின் மைந்தன் காரைக்கால் பைஜுர் அலி, ஆகியோர் தயார் செய்தனர்.

28/06/2020 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 6:00 மணிக்கு ராசல் கைமா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் தமிழக சகோதர, சகோதரிகள் 85 பயணிகள் இறைவன் அருளால் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றடைந்த உடன் அங்கிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் ஆபித் ஹுஸைன் தங்ஙள் MLA ஏற்பாட்டில் கேரள அரசுப் பேருந்துகள் மூலம் தமிழக எல்லையான ஆரியங்காவு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கேரள எல்லைப் பகுதியான சென்று பயணிகளை வரவேற்கிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்த பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் ஸாஹிப் MLA அவர்கள் வேண்டுகோளை ஏற்று தனது நியூ கேம்ப் பிரிட்ஜ் பள்ளியில் இடம் அளித்த தாளாளர் அல்ஹாஜ். அக்பர் ஸாஹிப் அவர்களுக்கு பேரவையின் சார்பில் இதயம் கனிந்த நன்றிகள்.

பெண்கள், குழந்தைகள், உடல் நலிவுற்றோர், கர்பிணிகள் என பலதரப்பு பயணிகளையும் தங்கள் விருந்தினர்களாக கருதி வரவேற்று உபசரிக்க காத்திருக்கும் தென்காசி மாவட்டத் தலைவர் ஹாஜி.சைய்யது சுலைமான்,மாவட்ட செயலாளர் இக்பால்,முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய செயலாளர் புளியங்குடி அல்-அமீன், தென்மண்டல இளைஞரணி அமைப்பாளர் பாட்டபத்து கடாஃபி,கடையநல்லூர் நகர தலைவர் செய்யது மசூது, முஸ்லிம் யூத் லீக் மாநில துணைத் தலைவர்கள் S.K.M.ஹபீபுல்லாஹ், செய்யது பட்டாணி, கடையநல்லூர் ரஹ்மத்துல்லாஹ், STU மைதீன், ரஹ்மான், சையது அபு உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னோடிகள், யூத் லீக், MSF உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவருக்கும் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் அகமகிழ் நன்றி.

விமான நிலையம் சென்ற பேரவை நிர்வாகிகள் , துபை வடக்கு அமீரகங்கள் அமைப்பு செயலாளர் அஞ்சுக் கோட்டை அப்துல் ரஜ்ஜாக், துபை மண்டல துணைச் செயலாளர் அய்யம்பேட்டை அமானுல்லாஹ், ராசல் கைமா மண்டல செயலாளர் அப்துல் ஜமீல் ஜெஃப்ரி, மற்றும் நிர்வாகிகள் விடிய விடிய காத்திருந்து நம் தமிழக மக்களுக்கு இன்முகத்தோடு ஸ்னாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கி அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.

கடினமான காலகட்டத்தில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த மக்களை சொந்த ஊர் செல்ல நாம் செய்த ஏற்பாடுகளுக்கு துணை நிற்கும் பேரவை நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.!

- நமது செய்தியாளர் காஹிலா

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement