Advertisement

அமீரக கல்வியாளர் உரை நிகழ்த்திய பன்னாட்டு கருத்தரங்கம்

Share

துபாய்: அமீரக கல்வியாளர் முனைவர் ஆ. முகம்மது முகைதீன் உரை நிகழ்த்திய பன்னாட்டு கருத்தரங்கம் காணொலி வழியாக 26.06.2020 வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. சேலம் - 7, அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி) யின் தமிழ்த்துறை* மற்றும் * உள் தர மதிப்பீட்டு மையம் இணைந்து இணைய வழிப் பன்னாட்டு உரையரங்கத் தொடர் நிகழ்வு (எட்டாவது உரையரங்கத் தொடர்) நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் சி. கலைச்செல்வன் தலைமையுரை நிகழ்த்தினார். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் இரா. சாந்தி தொடக்கவுரை நிகழ்த்தினார். முனைவர் ந.விஜயகுமார் வாழ்த்துரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியின் இணைய ஒருங்கிணைப்பாளராக தமிழ்த்துறை பேராசிரியை முனைவர் ஜ.பிரேமலதா பங்கேற்று சிறப்புடன் கருத்தரங்கை நடத்தினார். சங்க காலமுதல் தற்காலம் வரை - வணிகம் என்ற தலைப்பில் ராசல் கைமா பவர்புளோ நிறுவனத்தின் நிதி இயக்குநர் மற்றும் சமூக ஆர்வலருமான முனைவர் ஆ.முகமது முகைதீன் உரை நிகழ்த்தினார். ஊரடங்கு கால பொருளாதாரச் சூழலிலிருந்துத் தங்களை மீட்டெடுக்க விரும்பும் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய வகையில் இந்த உரை அமைந்திருந்தது.

இதில் பல வழிகாட்டல்கள், நெறிப்படுத்தல்கள், ஆற்றுப்படுத்துதல்கள் நிறைந்த விழிப்புணர்வு தரும் உரையரங்கம். தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மேலாய்வாளர்கள் , வணிகவியல், மேலாண்மை சார்ந்தவர்களும், புதிதாகத் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும், மாற்றுவழி தேடுவோருக்குமான உரையாக இது இருந்தது. முனைவர் முத்துநகை நன்றியுரை நிகழ்த்தினார். இந்த கருத்தரங்கு சிறப்பாக நடைபெற தேவையான தொழில்நுட்பத்தை கில்லி சாய் எஸ். ரஹ்மத்துல்லா வழங்கியிருந்தார். முதுவை ஹிதாயத் கருத்தரங்க ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்.

இந்த கருத்தரங்கில் இந்தியா, இலங்கை, சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்தது.

- நமது செய்தியாளர் காஹிலா

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement