Advertisement

தமிழ் நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

Share

தமிழ் நாடு அறக்கட்டளை நிறுவனத்தின் ஹூஸ்டன் கிளை , ஜூன் மாதம் இருபது , இருபத்தொன்றாம் நாட்களில் ஹூஸ்டன் மாநகரத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை மிகவும சிறப்பாக நடத்தியது. ஒவ்வொறு ஆண்டும் இந்தப்போட்டியை நேர்முகமாக நடத்திவந்த நிறுவனத்திற்கு இந்த ஆண்டில் ஒரு சோதனை. கடந்த நான்கு மாதங்களாக உலகம் முழுதும் பரவிய கொரோனா நோய்த்தொற்றாலும் , “விழித்திரு ! விலகி இரு ! வீட்டில் இரு” என்ற அரசுக்கட்டளையாலும் “ “ கணினி செயலின்” வழியாக , “ஸூம் நேரலையில் “ திருக்குறள் போட்டி நடந்தது.
இந்த வருடப் போட்டியில் ஐந்து வயதிலுருந்து பதினெட்டு வயதிற்குட்பட்ட முப்பது மாணவர்கள் கலந்து கொண்டனர் . கடந்த சில ஆண்டுகளாக , மாணவர்களை ஊக்குவிக்க குறளொன்றுக்கு ஒரு டாலர் என்று தமிழ் நாடு அரசுக்கட்டளையின் ஹூஷ்டன் கிளை நிறுவனம் பரிசளித்து வந்தது. இந்த ஆண்டு , தன்னலமின்றி , கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைக்கவனித்து வரும் மருத்துவர்களையும் , மருத்துவ நிலைய ஊழியர்களுக்கும் , உதவியாளர்களுக்கும் , உயிர்க்காவலர்களுக்கும் , அவசர கால அதிகாரிகளுக்கும் உதவி செய்யும் குறிக்கோளுடன் இயங்கி வரும் “care.org” வளைதலத்திற்கு நிதி திரட்டும் எண்ணத்துடன் திருக்குறள் போட்டியை நடத்தியது.
இதில் பங்கேற்ற மாணவர்களும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கடினமாக உழைத்து ஆயிரத்து ஐநூறு திருக்குறள்களை ஒப்புவித்தனர் . நடுவர்கள் வெற்றி பெற்ற ஐந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தினர் . வெற்றி யெற்ற மாணவர்களின் வரிசை: (1) வித்யா கந்தசாமி ( 460 குறள்கள்) (2) வாணி கந்தசாமி (3)ஹர்ஸித் கோபி (4) சிந்தியா செல்வராசன் (5) வர்ஷிதா நடராஜன் (5) இனியா நடராஜன் . தமிழ் நாடு அறக்கட்டளை திருக்குறள் போட்டி நடுவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ் நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன் கிளை நிர்வாக குழுவும் , தன்னாரவலர்களும் இந்த நிகழ்ச்சி சிறப்பாகநடைபெறக் காரணமாவார் கள் . குறிப்பாக திரு . தங்கராஜ் பெச்சியப்பன் மற்றும் திரு. சோலையப்பா சொக்கலிங்கம் முன்னிருந்து இந்த திருக்குறள் விளையாட்டை பக்குவமாக நடத்தினார்கள். அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

- தினமலர் வாசகர் தங்கராஜ் பேச்சியப்பன்

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement