Advertisement

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் கடல் கடந்து தாயகத்தில் ரமலான் காலத்து உதவி

Share

கொரோனோ பேரிடர் கால துயத்துடைப்பு தொடர்ச்சேவையில் தாயகத்தில் உள்ள தன்னார்வலர் தொண்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து 60 நாட்களாக சேவை செய்து வருகின்ற ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் ரமலான் மாதம் ஆரம்பமானதும் நோன்பு நோற்கும் மக்களுக்கு அதிகாலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு... தஞ்சையில் உள்ள தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம், மக்கா மதினா ஈமான் அறக்கட்டளை, இயற்கை அறக்கட்டளை மற்றும் கிங்ஸ் கேட்டரிங்ஸ் நட்புகளோடு கைக்கோர்த்து கடந்த ஒரு மாத காலமாக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று தினமும் சுமார் 400 பேர்களுக்கும் அதிகமானோருக்கு சிறப்பு உணவு வழங்கப் பட்டது.

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத் தலைவர் லயன் ஜாஹிர் ஹூசேன் ஒருங்கிணைத்த புலனச்செயலி மூலம் மக்கா மதினா ஈமான் அறக்கட்டளையின் லயன் அப்துல்லாஹ், லயன் காலித் அஹமது, இயற்கை அறக்கட்டளையின் பீர் முகம்மது, இக்பால் மற்றும் கிங்ஸ் கேட்டரிங்ஸ் லயன் அப்பாஸ் மற்றும் தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் தங்கள் வெளிநாடு வாழ் நண்பர்களை இணைத்து பொருளாதார நிதிகளைத் திரட்டி தினமும் தரமாக சமைத்து, சமூக இடைவெளி கடைபிடித்து பெரும்பாலான மக்களுக்கு நேரில் அவர்கள் இல்லங்களுக்கே சென்று உணவை விநியோகித்தது. இதனை தினமும் வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் லயன் அமல் பீட்டர் ஸ்டாலின் பாபு ஆட்சியர் அலுவகத்தின் கவணத்திற்கு அறிக்கையாக தந்து கொண்டு இருந்தார். அதிகாரிகள் பாராட்டும் அளவிற்கு இந்த சேவை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்த கொரோனோ பேரிடர் கால ஊரடங்கு இக்கட்டான நேரத்தில் மிக ஏழ்மையான 200 குடும்பங்களுக்கு ரமலான் பண்டிகையைக் கொண்டாட 5 கிலோ அரிசி, எண்ணெய், பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட ரூ 500 மதிப்புள்ள பொருட்களும் ரொக்கமாக தலா ரு 150 ம் வழங்கப் பட்டது. இதனை அறக்கட்ளை நிர்வாகிகள் தஞ்சையின் அனைத்துப் பகுதிகளிலும், புதுக்கோட்டை புத்தாம்பூர் பகுதிகளிலும் வழங்கினர். மேலும் ஒரு வாரத்திற்கு ஸஹர் நேர உணவு வழங்க ஏற்பாடும் செய்துள்ளது.

இந்தச் சேவையில் இணைந்து சிறப்பாக செயல்பட்ட அத்தனை நிர்வாகிகளையும் தஞ்சை மக்கள் வெகுவாக பாராட்டி ஒற்றுமையாய் இன்னும் பல சேவைகளை தேவையுள்ளோருக்கு உதவும் படி கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
கொரோனோ பேரிடர் துயர் துடைப்பு ஊரடங்கு ஆரம்பமான மார்ச் இறுதி வாரத்தில் இருந்து இதுவரை தன்னார்வ தொண்டு நிறுவங்களுடன் இணைந்து இதுவரை சுமார் ரூபாய் 27 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் சேவைகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடல் கடந்து வாழ்கின்ற ஜெத்தா முத்தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தாயக மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர்.

- தினமலர் வாசகர் ஜாஹிர் ஹூசேன் (ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத் தலைவர்)

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement