Advertisement

சவூதி ரியாத்திலிருந்து சவூதியா விமானத்தில் இந்தியர்கள் ஐதராபாத் பயணம்

Share

கோவிட் -19 லாக்டவுன் நாட்களிலும் சவூதி அரேபிய தம்மாம் நகரிலிருந்து ரியாத் விமான நிலயத்திலிருந்து இந்தியா ஐதராபாத் நகருக்கு சவூதி அரசுத் விமானத்துறை சவூதியா விமானத்தில் 61 இந்தியர்களை மனிதாபிமானத்துடன் அனுப்பி வைத்த சவூதி அரசாங்கம்!தம்மாம் நகரைச் சார்ந்த 61 இந்தியர்கள் உட்பட 200 இந்தியர்கள் ரியாத் விமான நிலயத்திலிருந்து இந்தியா ஐதராபாத் சென்றடைந்தார்கள்!
Saudi Residential Permit- IQAMA சவூதியில் தங்கியிருக்கும் அனுமதி சீட்டு காலாவதி தேதி கடந்ததால் 3 மாதங்கள் இக்காமா டீடென்ஷன் சிறைகளில் தம்மாமில் இருந்தவர்கள் விசாரணை முடிந்து சவூதி அரசின் உத்தரவுபடி விடுவிக்கப் பட்டு அவர்களை அரசே பஸ்களில் ஏற்றி தம்மாமிலிருந்து சாலைவழியாக ரியாத் விமான நிலயம் அனுப்பி வைத்தார்கள்!
61 இந்தியர்களின் சவூதியா விமான கட்டணம் (30,000₹ இந்திய ரூபாய் கொண்டது) யாவற்றையும் சவூதி அரசே ஏற்றுக் கொண்டு இந்த கொரானா ஊரடங்கு காலத்திலும் செய்தது!

ஈகை திருநாள் காலத்தில் இந்த மனித நேயப்பணியை சவூதி அரசு செய்தது கண்டு 61 இந்தியர்களின் குடும்பத்தினரும் நன்றி உணர்வுடன் உள்ளனர். இந்திய தூதரகம் ரியாத் 61 இந்தியர்களுக்குமான தற்காலிக பாஸ்போர்ட்களை வழங்கியிருந்தது! அனைவருக்கும் கொரானா தொற்று சோதனை அரசால் செய்யப்பட்டிருந்தது, அனைவரும் நலமுடன் இருந்தனர். தம்மாம் இந்திய சமூகப் பணியாளர்கள் திரு. நாஸ் வக்கம் (நவோதயா கலாச்சார மையம்), திரு. வெங்கடேஷ் (தமிழ்நாடு சமூக நல அமைப்பு), திரு. இலியாஸ் யாவரும் 61 இந்தியர்களுக்கான பயண தொடர்புப் பணிகளைச் சவுதி சிறைக் காவல்துறை & இந்திய தூதரகம் இவற்றுடன் இணைந்து செய்தனர்.
தம்மாமில் உள்ள 61 பேர் உள்ளிட்ட 200 இந்தியர்களுடன் முதல் ரியாத்- ஐதராபாத் சவூதியா சிறப்பு விமானம் தரையிறங்கிய பின் பயணமான 200 இந்தியர்களும் ஐதரபாத்தில் சிறப்பு கொரானா தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்! தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அந்த அந்த மாநில அரசுகள் உள்நாட்டு போக்கு வரத்து உதவிகளைச் செய்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது!

- தினமலர் வாசகர் சுரேஷ் பாரதி

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Muraleedharan.M - Chennai,இந்தியா

    சவுதி அரசு மிகவும் இரக்கப்பட்டு அவர்களே பணத்தை செலவு செய்து இந்தியர்களை தாய் நாட்டிற்கு அணும்பினர். ஆனால், இந்தியாவிலுள்ள இந்தியர்களே கூட்டு களவாளிகள். வருகின்ற பணத்தை 85% களவாடி விட்டு மீதிதான் செலவு செய்வர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement