Advertisement

எம். நாகபூஷணம்: ஆர்ப்பாட்டமில்லா- மனிதாபிமான, வளைகுடா தமிழக தொழிலதிபர்

Share

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் பயந்து ஒதுங்கி விடாமல் அல்லது தள்ளி வைக்காமல் துணிச்சலுடன் நேரிட வேண்டும். ஒரு சிக்கல் ஏற்படும்போது பதற்றமில்லாமல் - ஆர்ப்பரிப்பில்லாமல் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து - அலசி - ஆராய்ந்து - பேசி சுமூகமாய் முடிவு எடுப்பது குவைத்தில் Rank ஜெனரல் டிரேடிங் - கான்டிராக்டிங் கம்பெனியின் நிறுவனரும் - மேனஜிங் டைரக்டருமான திரு. நாகபூஷணம் அவர்களின் சிறப்பு.
இவர் சென்னை அம்பத்தூர் அருகே சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் . அப்பா பெரம்பூர் ICF ல் பணிபுரிய, அம்மா ,நிலங்களை கணித்துக்கொள்ள, நாகாவிற்கு பள்ளி படிப்பின் போதே MIT யில் பொறியியல் படிக்க வேண்டும் என்கிற லட்சியம்! அதற்காக பிரெசிடென்ஸி கல்லூரியில் பி.எஸ்.சி முடித்து பிறகு இவரது விருப்பப்படியே எம்.ஐ.டி.! அங்கு கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் 1975-ல் நெய்வேலி என்.எல்.சி.யில் சேர்ந்தார்.
அங்கு எக்ஸிக்யூடிவ் என்ஜினீயராக பணியாற்றிய போது 1982-ல் குவைத்திலிருந்து வாய்ப்பு வர முதலில் பாப்-காக் எனும் ஜெர்மன் கம்பெனியில் சேர்ந்தார்.அடுத்து 1984-ல் ISCO கான்ட்ராக்ட் கம்பெனி !

அப்போது அந்த நிறுவனம் புதிதாக கான்ட்ராக்டிங் டிவிஷன் ஆரம்பித்திருக்க , தனது கடுமையாய் உழைப்பால் அதை உச்சத்துக்கு கொண்டு சென்றார். அதன் காரணமாய் கம்பெனி உரிமையாளரின் மனதில் இடம் பிடித்து , Site என்ஜினீயர் ஆக அங்கு குறுகிய காலத்திலேயே மானேஜர் ,C hief Operation மானேஜர் என உயர்த்தப்படடர்.
தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு :
அங்கு தனக்கு கிடைத்த பொறுப்பு மற்றும் செல்வாக்கை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணாமல் , இந்தியர்களுக்கு அதுவும் குறிப்பாய் தமிழர்களுக்கு பயன் தரவேண்டும் என்று கம்பெனியில் பத்து விதமான பிரிவுகளை உருவாக்கி அவற்றின் மூலம் 2500 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தார்.
நாகாவின் எளிமையும்,மனிதாபிமான அணுகுமுறையும் அவரது நிர்வாக திறமைக்கு பலம் சேர்த்திருக்கிறது..அதனால் அங்கு ஏதாவது தொழிலாளர் பிரச்சனை என்றல் நிர்வாகம் இவரைதான் அனுப்பி தீர்த்து வைக்கும்! நாகாவும் தன நற்பெயருக்கு களங்கம் வராத வகையில் நடுநிலைமையுடன் செயல்பட்டு பிரச்சினைகளை முடித்து வைப்பார்.
குவைத்தில் ஸ்பிக் கம்பெனி இன்று Gulf Spic எனும் பெயரில் சுமார் 4000 இந்தியர்களுக்கு வேலை கொடுத்து சிறப்பாக இயங்கி வருகிறது. அது 1992 ல் குவைத்தில் காலூன்றுவதிற்கு தான் பணிபுரிந்த ISCO கம்பெனி மூலம் வழி வகுத்து கொடுத்த பெருமை நாகாவிற்கு உண்டு.
நிர்வாகம் மற்றும் தொழிலில் நாகா, கரார் என்றாலும் கூட மனிதாபிமானம்--பரோபகாரம் மிக்கவர்.தொழிலார்களின் கஷ்டங்களுக்கு செவி சாய்ப்பவர்.
சதாம் சண்டை சமயம் இந்தியர்கள் எல்லாம் பதற்றத்திலும்,பரிதவிப்பிழும் இருக்க , தனது உடமைகளை விற்று பணம் கொடுத்து தனக்கு கீழ் பணியாற்றியவர்களை பாதுகாப்பாய் பாக்தாத்திற்கு அனுப்பி , அங்கிருந்து அவர்களது ஊருக்குச் செல்ல வழி வகுத்துக்கொடுத்தது நாகாவின் தொண்டுள்ளத்திற்கு சான்று.
சொந்தமாய் தொழில் :
என்னதான் அது நல்ல கம்பெனி நல்ல ஊதியம்-நல்ல செல்வாக்கு என்றாலும் கூட--- ஒரு கால கட்டத்தில் தன் திறமை, உழைப்பு இவற்றை பிறருக்காகவே கொடுத்துக் கொண்டிருக்க வேண்டுமா -- ஏன் சொந்தமாய் தொழில் தொடங்கக் கூடாது என்கிற சிந்தை எழ ஆரம்பித்தது . அதன் பலனாய் தன் அனுபவம் - மற்றும் தனது தொடர்புகளை வைத்து 2001 ல் இந்த RANK Gen .Trd கம்பெனியை ஆரம்பித்து அது 400 பேர்களுக்கு மேல் தொழிலார்களை கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது.
நாகா எப்போதும் சமூக சிந்தனையும்,அக்கறையும் கொண்டவர்..எந்தவித ஆர்ப்பாட்டமும் ,இல்லாமல் அமைதியாய் பின்னிலிருந்து இந்தியர்களுக்கு உதவி வருபவர். இதற்காக சென்னை MIT-AA குவைத் பிரிவு -இவருக்கு சிறந்த NRI தொழில் அதிபர் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது .
நாகா - குவைத்தில் பாரதி கலைமன்றத்திலும் ,தமிழ்நாடு என்ஜினீயரிங் குழுமத்திலும் தலைவராக பொறுப்பேற்று திறம்பட நடத்திதி இருக்கிறார். இந்தியன் பிரன்ட் லைனர்ஸ் சேவை அமைப்பின் ஆலோசகராகவும் , MIT-AA குவைத் பிரிவின் தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.
திருமதி ரஞ்சிதம் நாகா குடும்பத்தை நன்கு நிர்வகித்துக் கொள்வதால் தன்னால் முழுநேரமும் தொழில் மற்றும் சேவையை கவனிக்க முடிகிறது என்று பெருமையுடன் நினைவு கூறுகிறார் நாகா.. இவர்களது மகள் Dr. சங்கீதா UK வில் -NHS ஆஸ்பிட்டலில் மருத்துவர் !. டெலிகாம் என்ஜினீயராணா இவர்களது மகன் செந்தில் பிரபு இவர்களது சென்னை டெலி கம்யூனிகேஷன் கம்பெனியை நிர்வகித்து வருகிறார்.
நாகா தன் வருமானத்தில் கணிசமான பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு அளித்து வருவதுடன் குவைத்தில் பல கலை-கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் தோள் கொடுத்து வருவது பாராட்டப் பட வேண்டிய ஒன்று.
-NCM வித் Hari

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    வாழ்த்துக்கள் .

  • Raghavan.G - coimbatore,இந்தியா

    He is real gentleman. Let him grow further to help needy people in future .My best wishes to Mr. Naga.

  • Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    வாழ்த்துக்கள். மேலும் மேலும் உயர வேண்டுகிறேன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement