Advertisement

பிரான்ஸில் கொரோனா பாதிப்பு

பிரான்ஸில் அதிபர் இமானுவல் மக்ரோன் கேட்டு கொண்டபடி இரண்டாவது வாரமாக தனிமைபடுத்தி கொள்வது தொடர்கிறது. முதல் முறை தடையை மீறுபவர்களுக்கு அபராதமும் இரண்டாவது மீறுபவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகின்றது. கொரோனாவால் 7240 நோயாளிகளில் 1746 பேரின் நிலைமை கவலைகிடமாகவும் 674 பேர் மற்றும் ஒரு மருத்துவர் இறந்து விட்ட நிலையில் தனிமைபடுத்தி கொள்வது தொடருமா என்ற ஐயம் மக்களிடம் எழுந்துள்ளது. நோய்வாய்ப்பட்டவர்கள் அதிகமாக இருப்பதால் நிலைமயை சமாளிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற மருத்துவ ஊழியர்கள்உதவ முன் வந்துள்ளனர்


2br@@
இந்நிலையில் பிரெஞ்சு மக்களை தங்கள் வீடுகளில் தனிமைபடுத்தி கொள்வதை ஊக்குவிக்க, தனியார்தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நட்சத்திர சமையல்காரர்களுடன் நேரடி சமையல் பாடங்களை வழங்குகின்றது.Cyril Lignacமிகவும் பிரபலமான சமயல் கலைஞர் நடத்தும் நிகழ்ச்சி நாளை மாலை 6:45 மணிக்கு தொடங்கும். சனிக்கிழமை 21/03/2020 இவர் நடத்திய நேரடி நிகழ்ச்சி ஏற்கனவே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

பிரஞ்சு அரசு எடுத்து வரும் முயற்ச்சிகளுடன் மக்களின் ஒத்துழைப்பும் சேர்ந்தால் கொரோனா மிக வேகமாக ஒழிந்து விடும்.

- நமது செய்தியாளர் ஜெயகௌரி


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement