Advertisement

சான் ஆண்டோனியோ தமிழ்ப்பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

'விதைத்துக் கொண்டே இரு.முளைத்தால் மரம்,இல்லையேல் உரம்'-சே குவேரா.உலகம் முழுவதும் இன்றுள்ள நிலைமை கற்றுக்கொடுத்துள்ள பாடம்- சூழலுக்கேற்ப வாழக் கற்றுக்கொள். உண்மை தானே! இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூழ்நிலைகளை அனுசரித்து தங்களை மாற்றிக்கொண்டு வருகிறார்கள். வெளியே செல்ல முடியவில்லை,ஆனால் நடந்து கொண்டிருந்த காரியங்கள் தடைபடக் கூடாது. அலுவலகங்கள் இல்லங்களில் நடக்க ஆரம்பித்ததைப் போல பள்ளிப் பாடங்களும் இல்லங்கள் தேடி வரத் தொடங்கிவிட்டன.அவ்வகையில் டெக்சாஸ் சான் ஆண்டோனியோ தமிழ்ப் பள்ளி நிர்வாகிகள், கடந்த வாரம் இங்கு பணியாற்றும் தன்னார்வல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, பின் மார்ச் 21 ஆம் தேதி சனிக்கிழமையில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஆரம்பித்து வெற்றியும் கண்டுள்ளனர். பெற்றோர்களுக்கும் பயிலும் குழந்தைகளுக்கும் புதுவிதமான மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.இதனால் அமெரிக்காவில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இந்த கட்டாய விடுமுறை காலத்தில் தமிழையும் விடாமல் தொடர முயன்ற தன்னார்வல ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்!

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement