Advertisement

ஹூஸ்டன் ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவில் சிவராத்திரி பெருவிழா

நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் இருக்கும் ஓர் ஆற்றல்-எனர்ஜி தான் சிவா-ஓம் நமசிவாய. ஓம் எனும் ஒலியே பிரபஞ்சம். அனைவரும் அறிந்ததே. நாம் சிவராத்திரியை மிக ஆத்மார்த்தமாகவும்,புனிதத்தோடும் கொண்டாடிவருகிறோம் உலகமெங்கும்.டெக்சாஸ் ஹூஸ்டனில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமீனாட்சி அம்மன் திருக்கோவிலில் அத்தகைய சிரத்தையுடன் சிவராத்திரி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நாலுகால பூஜை எனப்படும் நான்கு ஜாமங்களிலும் சிவனுக்கு சிறப்பு பூஜைகள்,நான்கு ஜாமங்களில் செய்ய வேண்டிய அபிஷேகங்கள், அர்ச்சனைகள், ஆராதனைகள் என பட்டாச்சாரியார்களால் வெகு விமரிசையாக நடைபெற்றன.இவ்வருடத்தில் இரண்டு சிறப்பான விஷயங்கள் என்று பார்த்தால் ஒன்று வெள்ளியில் 'ரிஷபவாகனம்' மற்றொன்று- 'ருத்ராட்சத்தில் ஆடை'! அன்னபூர்ணா பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் இந்திய ரூபாய் 70 லட்சம் மதிப்பில் வெள்ளியில் 'ரிஷபவாகன்ம்' வழங்கியுள்ளனர். மேலும் மாலதி சுந்தரமூர்த்தி குடும்பத்தினர் இந்தியா ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான 'ருத்ராட்ச கவசம்' வழங்கியுள்ளனர். ருத்ராட்சங்கள் ரிஷிகேஷிலிருந்து வரவழைத்து இக்கவசம் செய்திருக்கிறார்கள்.அழகான வெள்ளி ரிஷபவாகனத்தில் வலம் வரும் உற்சவரும், ருத்ராட்ச கவசத்தில் ஜொலிக்கும் சிவலிங்கமும் காணக் கண் கோடி வேண்டும்!நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    மாயவரம் பகுதியை சேர்ந்த சிவாச்சாரியார்கள் மிக சிறப்பாக கோவிலை நடத்துவதுடன் அங்கு வாழும் தமிழர் இல்லங்களில் பூஜை செய்வது மற்றும் முகூர்த்த நாள் குறித்து தருவது போன்ற பணிகளை சிறப்பாக செய்கிறார்கள் ..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement