Advertisement

டல்லாஸ் நகர தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் அமைந்துள்ள இர்விங்-ல் வித்யா விகாஸ் தமிழ்ப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் ஆண்டு விழா கடந்த வாரம், கலை விழாவாக நடைபெற்றது. அமெரிக்க மற்றும் இந்திய தேசிய கீதங்களைப் பள்ளி மாணவர்கள் பாடி, விழாவைத் துவக்கி வைத்தனர். ஆசிரியைகள் அனைவரும் இணைந்து 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடினார்கள்.புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் தமிழ் உணர்வைப் பாராட்டி வரவேற்புரை வழங்கப்பட்டது.குழலையும் யாழையும் விட 'முன்-மழலை' குழந்தைகளின் மழலைப் பாடல்கள் மிகச் சிறப்பான தொடக்கமாக அமைந்தது. இவ்விழா பண்டைய காலம் முதல் தற்போதைய நாகரீகம் வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்தது மட்டுமல்லாமல், எதிர்காலத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது. பக்தி இலக்கியத்தில் இருந்து 'பஞ்ச பூத ஸ்தலம்' மற்றும் 'திருவிளையாடல்' நாடகமாகவும், தமிழனின் வீரத்தை பறைசாற்றும் வேலுநாச்சியாரின் வீரம், கதைப்பாடல் மற்றும் நாடகமாகவும் நடத்தப்பட்டது.மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி 'இயற்கையைக் காப்போம்' என்ற தலைப்பிலும், பூமியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 'பால்வெளியில் ஒரு பாசப்போராட்டம்' என்ற தலைப்பிலும் சிறு நாடகங்கள் நடத்தப்பட்டன. பார்வையாளர்களின் ரசனைக்கேற்ப நகைச்சுவை ஊட்டும் விதமாக 'பரமார்த்த குரு மற்றும் சீடர்கள்' என்ற நாடகமும் 'காபி வித் கடவுள்' என்ற கலந்துரையாடலும் நடைபெற்றது.முத்தாய்ப்பாக மாணவ-மாணவிகள் வழங்கிய 'தமிழ்ப் பாடத்தில் புதுமை' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.திருமதி மகாலட்சுமி மற்றும் திரு சிவகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள். சுவையான இரவு உணவோடு விழா இனிதே நிறைவுபெற்றது.

- நமது செய்தியாளர் லக்குரெட்டி அழகர்சாமி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement