Advertisement

ஆக்லாந்து திருமுருகன் ஆலயத்தில் மகா சிவராத்திரி கோலாகலம்

ஆக்லாந்து, மெளண்ட் வெல்லிங்டன் அருள்மிகு திருமுருகன் ஆலயத்தில் பிப்ரவரி 21, 22 தேதிகளில் மகா சிவராத்திரி மகோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆவுடையாருக்கு கலசாபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாகும். அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் என பக்திப் பெருமக்களுக்கு ஆலயம் பெரு விருத்தளித்தது எனலாம். ' ஓம் நமசிவாயா...” முழக்கத்தோடு மகா தீபாராதனை நடைபெற்றது. வெளிநாடு ஒன்றில் அழகு தமிழில் சிவாகம நெறிநின்று வழிபாடு நடைபெற்றமை பாராட்டுக்குரிய ஒன்றாகும். ஆலய நிர்வாகத்தினர் அன்பொழுக பக்தர்கட்கு ஆவன செய்தனர். திரளான தமிழர்கள் கலந்து கொண்டதைக் காண முடிந்தது.

- நமது வாசகர் தரணிதரன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement