Advertisement

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகத்தின் முன்னெடுப்பில் ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் உள்ள மத்திய பாராளுமன்ற வளாகத்தில் இவ்வருடம் நான்காம் முறையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக அரங்கம் பொங்கல் பானை, கரும்பு , வாழை மரங்களுடன், மாவிலை தோரணங்களும் சேர்ந்து ஆஸ்திரேலியா பாராளுமன்றம் விழாக்கோலம் பூண்டிருந்தது.இவ்விழாவில் ஆளும் கட்சி சார்பாக மூத்த அமைச்சர் Hon. Alan Tudge MP , எதிர் கட்சி மற்றும் தொழிற்கட்சித் தலைவருமான Hon Anthony Albanees MP, பசுமை கட்சியின் மேனாள் தலைவர் Mr Richard De Natalie MLC மட்டுமல்லாது Ms Julie Owens MP, Mr Julian Leeser MP உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் செனட்டர்களும் கலந்துகொண்டனர். இவ்விழாவை அமைப்பின் தலைவர் அனகன் பாபு துவக்கி வைத்தார்.ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு பொங்கல் விழா பற்றி எடுத்துரைத்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இத்திருவிழாவை காண பிற மாநில தமிழ் அமைப்புகளை சார்ந்த தமிழ் ஆர்வலர்களும் வந்திருந்தனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது இறுதியாக கான்பரா தமிழ் சங்கச் செயலாளர் கார்த்திகா சீனிவாசன் நன்றி கூற விழா இனிதே முடிந்தது. SBS தமிழ் வானொலி நிகழ்வை நேரலை செய்தது. இதே போல் ஆஸ்திரேலிய பழமையான நியூ சவுத் வேல்ஸ் மாநில பாராளுமன்றத்திலும் ஐந்தாம் வருடமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

- தினமலர் வாசக்ர் அனகன் பாபு

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement