Advertisement

அபுதாபியில் நடந்த ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர்

அபுதாபி : அபுதாபியில் அக்ட்வெட் டாக் ரன் என்ற ஓட்டப்போட்டி கடந்த திங்கள்கிழமை 10.02.2020 அன்று நடைபெற்றது. இந்த ஓட்டப்போட்டியில் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்ற இளைஞர் முதல் இடத்தை பெற்றார். இவர் 5 கிலோ மீட்டர் போட்டியில் முதல் இடத்தை பெற்றார். அவருக்கு விளையாட்டு கவுன்சில் அதிகாரி பதக்கம் வழங்கி கவுரவித்தார். இந்த ஓட்டப் போட்டியில் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். முதல் இடத்தை பெற்ற செய்யது அலிக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement