Advertisement

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவருக்கு தமிழக அரசு இலக்கிய விருது

தமிழ் சேவையாளர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விருதுகள் வழங்கி வருகின்றது. உலக தமிழ்ச்சங்க விருதுகள் 2019 சென்னையில் கலைவாணர் அரங்கில் ஜனவரி 20-ம் தேதி தமிழக முதல்வர் பழனிச்சாமி வழங்கினார். விழாவில் - இலக்கிய விருது மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ. இராஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ. இராஜேந்திரன், மலேசிய இலக்கியத்திற்கும், இலக்கியவாதிகளுக்கும் தமிழக மண்ணில் அறிமுகம் ஏற்படுத்தவும் அங்கீகாரம் பெறவும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வெற்றிபெற்றுள்ளார். மலேசிய மாணவர்கள் படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் சூழல் பெற்றுத்தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-
- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement