Advertisement

'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் ஓவிய கலைஞர் தமிழரசி நடராஜன் ஏற்பாட்டில், 'கோல்டன்ஸ்ட்ரீக்' 2020 ஓவிய கண்காட்சி KL City art gallery -ல் 8 நாட்கள் நடைபெற உள்ளது.
கோல்டன்ஸ்ட்ரீக் 2020 ஓவிய கண்காட்சி : கோலாலம்பூர், Off Jalan syed putra, Lorong kapar, Wisma YPR -ல் அமைந்துள்ள KL City art gallery -ல் ஜனவரி 18 சனிக்கிழமை மாலை 7 மணி முதல் ஜனவரி 26 -ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் கண்காட்சியை முன்னணி ஓவிய கலைஞர் எஸ்கே பிரகாஷ் துவக்கி வைத்தார்.

அனைவரையும் வியக்கவைப்பது, மயக்கவைப்பது என்றென்றும் ஓவியங்களே!அந்தவகையில் ஒவ்வொரு ஓவியரும் பிரம்மாக்களே!

ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகளில் உருவான நூற்றுக்கும் மேற்பட்ட மனதை மயக்கும் அழகிய ஓவியங்களின் அணிவகுப்பில் இக்கண்காட்சி,பார்க்கும் அனைவரும் வியக்கும் விதத்திலும்,அவர்களது மனதை மயக்கும் வகையிலும் பிரம்மாண்டமான கண்காட்சியாக அமையும் என்பதில் அணு அளவும் ஐயமில்லை...இக்கண்காட்சி மாணவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களது திறமைகளை வெளிக்கொணரவும் ஒரு சிறந்த தளமாக அமையவும் ஏற்றபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் முதலில் கண்காட்சி கடந்த 2018-ஆம் ஆண்டில் கே.எல். இந்திய கலாச்சார மையத்தில் முதன்முறையாக 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் கண்காட்சி நடைபெற்றது. தற்போது 2020-ஆம்ஆண்டில்,இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 58 இளம் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் முன்னணி ஓவிய கலைஞர் தமிழரசியின் படைப்புகள் இடம்பெறவுள்ளன.

ஓவிய கலைஞர் தமிழரசி நடராஜனை பற்றி ஒரு சிறு முன்னுரை: தமிழகத்தின் ஈரோடு பகுதியைச் சார்ந்த ஓவிய கலைஞர் தமிழரசி நடராஜன் ,சிறுவயது முதலே வற்றாத ஓவிய ஆர்வம் கொண்டவர்...தான் கற்றுத்தேர்ந்த பல்வேறு ஓவிய நுட்பங்களை பயிற்றுவிக்க மற்றும் ஓவிய ஆர்வலர்களை ஒன்றிணைக்க கோலாலம்பூரில் 'தம்ஸி ஆர்ட்' (TamsiArt Sdn. Bhd) என்ற ஓவிய பள்ளியை பதிவுசெய்து துவக்கி நடத்திவருகிறார்.

ஓவியங்களை கற்றுக்கொள்வதற்கும் பல்வேறு நுட்பங்களை பரிசோதிப்பதற்கும் ஆர்வம் கொண்ட கலைஞரான இவர், இந்திய பரபரிய கலைகள் மீது மிகுந்த ஆர்வம்கொண்டவர், அசாதாரணமான பொறுமையைக்கொண்டிருப்பவர், சிக்கலான பல ஓவிய முறைகளை கற்று தேர்ந்தவர். கலை ஊடகம், வடிவம் மற்றும் வண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் சோதனை செய்வதும் அதே நேரத்தில் பாரம்பரிய கலை வடிவத்தின் சாரத்தை பாதுகாப்பதும் அவரது கலைப் படைப்புகளுக்குப் பின்னால் உள்ள அடிப்படைக் கொள்கையாகும். பாரம்பரிய கலையான தஞ்சாவூர் ஓவியத்தின் மீதான அளவுகடந்த பற்றுடைய இவர்,12 வருடத்திற்கும் மேலாக ஓவியம் பயிற்றுவித்து வருகிறார்.

இளங்கலை பொறியியல் பட்டதாரியான இவர் 2008 வரை 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.டி துறையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

'தம்ஸி ஆர்ட்' (TamsiArt Sdn. Bhd) ஓவிய பள்ளி: இந்திய பாரம்பரிய கலை ஓவிய முறைகளான தஞ்சாவூர் ஓவியம், மைசூர் ஓவியம், கேரள சுவரோவியம், 3 டி மியூரல், ஆயில் பெய்ன்டிங் மற்றும் பென்சில் ஸ்கெட்சிங், மார்ப்பில் ஓவியம், வாட்டர்கலர்கள், வர்லி ஆர்ட், லிப்பன் ஆர்ட் போன்ற முக்கிய கலை வடிவங்கள் மற்றும் நுட்பங்கள் ஒரே கூரையின் கீழ் ஓவியத்தில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றது. இப்பள்ளியில் 8 வயது சிறுவர் முதல் 70 வயது பெரியவர்கள் வரை ஓவிய ஆர்வலர்கள் முறையாக பயிற்சிபெற்று வருகின்றனர். இதுவரை இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சிபெற்றுள்ளனர். மாணவர்கள் தீட்டிய ஓவியத் தொகுப்பை www.tamsiart.com என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ற ஓவியங்கள் வரைந்து வழங்கும் சேவையும் செய்துவருகின்றனர்.

இதுபோன்று ஓவிய கலை பயிற்சிகள் இளம் மாணவ மாணவியர்களின் கைகள் மற்றும் மூளை இணைந்து செயலாற்றும் திறனை அதிகரிப்பது மட்டுமின்றி, கற்பனை மற்றும் படைப்பாற்றலையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
மேலும் கண்காட்சி விபரங்களுக்கு 016-6460774 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement