Advertisement

ஜனவரி 18 சர்வதேச கபடி தினமாக அறிவிப்பு

அமெரிக்காவின் உலகப்புகழ் வாய்ந்த டல்லாஸ் கவ்பாய்ஸ் அணியின் தலைமையகமாகவும் அமெரிக்காவின் விளையாட்டு துறையில் முன்னணி நகரமாகவும் திகழும் பிரிஸ்கோ நகரின் மேயர் ஜெப் செனி, ஜனவரி 18 ஆம் தேதியை 'சர்வதேச கபடி தினம்' என பிரகடனப்படுத்தியுள்ளார்.
டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்சங்கம், வருடந்தோறும் நடத்திடும் தைப்பொங்கல் திருவிழாவில் முதல்முறையாக தேசிய கபடி போட்டியை நடத்தவுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பல அணிகள் கலந்து கொள்ளும் இந்த தருணத்தில் இதை போன்ற பிரகடன செய்தி, மேலும் பலரை கபடி விளையாட உந்துதல் அளிப்பது மட்டுமல்லாமல், கபடி விளையாட்டை ஒலிம்பிக்கில் இணைத்திடவும், யோகாவை போல் உலகெங்கிலும் இந்த வீர விளையாட்டு செழித்தோங்கவும் ஒரு திறவுகோலாக அமையும் என்பது நமது திண்ணம்.

சிறப்பானதொரு பிரகடனத்தை வழங்கிய பிரிஸ்கா மேயர் ஜெப் செனிக்கு மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் நன்றியினை உரிதாக்குகிறோம்.


- தினமலர் வாசகர் விஜய் ரமணி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement