Advertisement

லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல்

Share

லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டு போலவே சுமார் 10 மணி அளவில் தமிழ் மக்கள் ஒன்று கூடி கம்யூனிடி பொங்கல் வைத்து தைத்திருநாளை அமர்களமாக கொண்டாடினர்.

கரும்பு மண்டபம் அமைத்து மாவிலை தோரணம் கட்டி அதில் பொங்கல் வைத்து ஆதவனை வழிபட்டனர். திருமதி பிரியா சங்கர் மண்டபத்தின் முன் வண்ணக்கோலம் போட்டு அசத்தி இருந்தார். கூடி இருந்த அனைவரும் பொங்கல் பானையில் 'பொங்கலோ பொங்கல்' என்று சொல்லி பால் ஊற்றி சக்கரைப்பொங்கல் செய்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்டனர். வெண்பொங்கல், வடை கூட பிரசாதமாக வழங்கப்பட்டது. சரியாக 11 30 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement