Advertisement

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்- குவைத் சார்பில் இலவச மருத்துவ முகாம்

இந்திய மருத்துவ மன்றம்- குவைத் மற்றும் இந்திய தமிழ் செவிலியர் மன்றம்- குவைத், உடன் இணைந்து 7 வது மெகா இலவச மருத்துவ முகாமை ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்- குவைத் வெற்றிகரமாக இந்திய குவைத் தூதரகத்தின் வழிகாட்டுதலுடன் 2020 ஜனவரி 10 வெள்ளிக்கிழமை குவைத்தின் சல்மியா இந்தியன் மாடல் பள்ளியில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.
இந்த மருத்துவ முகாமின் கருப்பொருள் 'சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கான 100% மருத்துவ விழிப்புணர்வு”. இந்த முகாம் பொது மருத்துவம், தோல் நோய், இருதயவியல், நீரிழிவு நோய், மகளிர் மருத்துவம், எலும்பியல், புற்றுநோயியல், புற்றுநோய், பிசியோதெரபி, ஈ.என்.டி, கண் பராமரிப்பு போன்ற மருத்துவ நிபுணர்களைக் கொண்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
இது தவிர பி.எம்.ஐ, பிபி, இரத்த சர்க்கரை, கொழுப்பு, ஈ.சி.ஜி மற்றும் அல்ட்ரா சவுண்ட் சோதனைகள் போன்ற சேவைகளை நாங்கள் வழங்குகினோம். 650 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றனர்.

- தினமலர் வாசகர் மீரான் மொஹைதீன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement