Advertisement

பஹ்ரைனில் "தர்பார்" வெளியீடு, ரஜினி மக்கள் மன்றம் கொண்டாட்டம்

மணாமா: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த முருகதாஸ் கூட்டணியில் உருவான தர்பார் திரைப்படம் அரபு நாடுகளில் திரையிடப்பட்டது. இதனை ஒட்டி பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜூபேர் பகுதியில் அமைந்துள்ள முக்தா சினிமாஸ் அரங்கில் வெள்ளிக்கிழமை காலை கேக் வெட்டி தொடங்கிய கொண்டாட்டங்களில் ஆடல் பாடல் என கலை காட்டியது. ரசிகர்களுக்கான காட்சியை மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்தனர். பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் சுரேஷ் காலாடி மற்றும் மன்ற நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement