Advertisement

சாண்டா வந்தார் ஆசிர்வாதங்களுடனும் பரிசுகளுடனும்

'பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன்'- ஏசாயா - 41 : 13
டிசம்பர் மாதம்-மாதங்களில் ஓர் சிறந்த மாதம். மார்கழி குளிர் ஓர் புறம், கடவுள்களை போற்றும் பூசைகளும் பஜனைகளும் ஓர் புறம். இந்தியாவில் கிறித்துவர்கள் 'கேரல்ஸ்' பாடல்கள் மூலம் இயேசுவின் மேல் உற்சாகமாய்ப் பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்விப்பார்கள்.அதே போன்று அமெரிக்காவிலும் டிசம்பர் முதல் இரு வாரங்கள் குழுக்களாகச் சேர்ந்து விரும்பியவர்கள் வீடுகளுக்குச் சென்று பாடி,ஆடி ஆசிர்வதிப்பர். ஒவ்வொரு வருடமும் எங்கள் இல்லத்திற்கும் வருவார்கள்.
அவ்வாறு நேற்று இரவு 'வெட்னெஸ்டே ஃபெல்லோவ்ஷிப் ' குழுவினர் சாண்டாவுடனும் குழந்தைகளோடு பெரியவர்களும் சான் ஆண்டோனியோவில் எங்கள் இல்லம் வந்து சிறப்பித்ததை உங்கள் பார்வைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய 'கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்'
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement