Advertisement

சிங்கப்பூரில் ஸ்ரீ ஐயப்ப பூஜை

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்ப பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. காலையில் ஸ்ரீ ஐயப்ப சங்கல்பத்துடன் தொடங்கிய பூஜை விக்னேஸ்வர பூஜை, விசேஷ நெய் அபிஷேகத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. பக்தப் பெருமக்கள் செலுத்திய குடம் குடமான பாலாபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பதினெட்டாம் படி பூஜை தொடர்ந்தது. விசேஷ திரவியாபிஷேகத்தால் ஸ்ரீ ஐயப்பன் குளிர்ந்தார். பக்தர்கள் சேர்ந்திசைத்த ஹரிவராசன தரிசனப் பாடலும் ஸ்ரீ ஐயப்ப சகஸ்ரநாம அர்ச்சனையும் மெய் சிலிர்க்க வைத்தன.சீருடை அணிந்த ஐயப்ப பக்தர்களின் பஜனையும் சரண கோஷமும் திரு விளக்குப் பூஜையும் இவ்வட்டாரத்தையே தெய்விக மணம் கமழச் செய்தன. பேட்டைத் துள்ளல் காட்சி அருமை. சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ஐயப்பனுக்கு ஷோடக உபசார மகா தீபாராதனை நடைபெற்ற போது பக்தர்கள் மனமுருகி சரண கோஷம் முழங்கினர். ஆலய நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement