Advertisement

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியருக்கு வரவேற்பு

துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அரபி மொழித் துறை மாணவர்கள் சார்பில் அரபி மொழித்துறை தலைவர் முனைவர் எம். அப்துல் காதருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் பள்ளபட்டி முஹம்மது காசிம் தலைமை வகித்தார். திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். அரபி மொழித்துறை தலைவர் முனைவர் எம். அப்துல் காதர் அரபி மொழித்துறையின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்ததுறையின் சார்பில் பல்வேறு மொழிபெயர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

சூப்பர் சோனிக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் ஜியாவுதீன், முஹிப்புல் உலமா முஹம்மது மஹ்ரூப், முதுவை ஹிதாயத், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஜாபர் சித்திக், இசாக் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். அபுசாலிஹ் நன்றியுரை நிகழ்த்தினார். இதில் முன்னாள் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement