Advertisement

நவ பாரதம் பஹ்ரைன் சார்பாக தொழிலாளர்களுக்கு நல திட்ட பணிகள்

பஹ்ரைன் மணாமா: இந்திய கலாச்சார அமைப்பான நவ பாரதம் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 29, 2019 அன்று தொழிலாளர்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா ஹபீரா தொழிலாளர் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. காலை நடைபெற்ற இலவச முகாமில் சுமார் 300 தொழிலாளர்கள் கலந்துகொண்டு மருத்துவ உதவி பெற்றனர். பின்பு மூத்த உறுப்பினர் ஆஷா பிரதீப் அவர்கள் தலைமையில் தொழிலாளர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசும்போது 'யோகா இந்தியாவின் பொக்கிஷம், மனதையும் உடலையும் பேணிக்காக்க யோகா பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும்' என்று கூறினார். பல்வேறு இந்திய கலாச்சார நடனங்களை சங்கீதா சாஜு மற்றும் ஷ்ரவன் குழுவினர் நடத்திக்காட்டினார்.சுமார் 500 நலிந்த தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருள்கள் வழங்கப்பட்டது. காலை மதிய உணவுகள் மற்றும் மாலை சிற்றுண்டி ஆகியவை பரிமாறப்பட்டன. நல திட்ட பணிகளுக்கு உதவிய கத்தார் இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாபுராஜ் மற்றும் டெல்டா எலக்ட்ரிகல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் குமார் ஆகியோருக்கு விழா குழுவினர் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பேசிய நவ பாரதம் அமைப்பின் தலைவர் ஜெயக்குமார் 'இன்று நடைபெற்ற நல திட்ட உதவிகள் மூலம் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், இதேபோல் தொடர்ந்து பல சேவைகளை செயல்படுத்தப்படும்' என்று கூறினார்.உதவிகளை பெற்ற தொழிலாளர்கள் நவ பாரதம் அமைப்பினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement