Advertisement

ஜெர்மனியில் ஆப்பிளை விட சின்ன வெங்காயத்தின் விலை பலமடங்கு உயர்வு

வெங்காயத்தின் விலை உயர்வு புத்தகங்களில் 'ஜோக்'காய் சிரித்தாலும் சாமானியனின் வெங்காய சாம்பார் கூட கேள்விக்குறியாகி விட்டது. அந்த விலை உயர்வு ஜெர்மனியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து ஜெர்மனிக்கு சின்ன மற்றும் பெரிய வெங்காயம் இறக்குமதியாகிறது. இங்கே கிடைக்கிற வெங்காயம் சற்று பச்சை நிறத்தில் இருக்கும். இந்தியாவிலிருந்து வந்தவர்கள் நம்மூர் வெங்காயத்தில் பழகி, இந்த வெங்காயத்தின் மணம் பிடிக்காமல் இந்திய கடைகளில் நம்மூர் சிவப்பு வெங்காயங்களையே பெரும்பாலும் வாங்குகின்றனர்.இந்தியாவில் பற்றாக்குறையின் காரணமாக வெளிநாட்டுக்கு வெங்காய ஏற்றுமதியை தடை செய்ததனால், இலங்கையிலிருந்து மட்டுமே இப்போது வெங்காய வரத்து இருக்கிறது. அதனால் சின்ன மற்றும் பெரிய வெங்காயங்களின் விலை உயர்ந்துள்ளது. சின்ன மற்றும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 5.99 யூரோவுக்கு கிடைக்கிறது. சில கடைகளில் இன்னும் அதிகம். ஜெர்மனியில் 2 கிலோ ஆப்பிள் 1.79யூரோவுக்கு இப்போது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


- நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement