Advertisement

மலேசியா கல்வி நிலையங்களில் உலக அமைதி தின விழா

மலேசியா உலக சமதான ஆலய வேண்டுகோளை ஏற்று மலேசியா முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் நவம்பர் 11 ஆம் தேதி 11 மணி 11 நிமிடங்களுக்கு உலக அமைதி தினம் அனுஷ்டிக்குமாறு மலேசிய அரசு கல்வித்துறை அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் ஆணை பிறப்பித்திருந்தது. அதன்வழி நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் மத, இன வேறுபாடில்லாமல் அனைத்து மாணவ, மாணவியரும் மகிழ்ச்சி தவழ “ நான் அமைதி காப்பேன், குடும்ப அமைதி காப்பேன், தேச அமைதி காப்பேன், உலக அமைதி காப்பேன் “ என உறுதி மொழி ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ வைத்தது.வளரும் இளம் தலைமுறையினரிடையே இந்த நல்லிணக்க ஞானத்தைப் பெருக்குவதே மகாமகரிஷி குருமகான் பரஞ்ஜோதியாரின் நோக்கமாகும். இதே போல கோலாலம்பூர் லிம் கோ விங் பல்கலைக் கழக ஆளுகைக்குட்பட்ட 167 நாடுகளிலுள்ள கல்வி நிலையங்களில் உள்ள மாணவச் செல்வங்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டமை பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவை. மலேசியா கல்வி நிலைய மாணவரிடை இம்முயற்சியைக் கொண்டு சென்ற டாக்டர் சரஸிஜெம் நாயர் மற்றும ராஜாமணி ஆகியோரின் சேவை பாராட்டுக்குரியது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement