Advertisement

பிரான்ஸில் மங்கள சந்திப்பு

பிரான்ஸ், திராப் நகரில் மகாத்மா காந்தி சங்கமும் கெட்டி மேளம் சங்கமும் இணைந்து நடத்ததிய 12 வது மங்கள சந்திப்பு மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கெட்டி மேளம் சங்க தலைவர் திரு மதியழகன் வரவேற்புரையாற்றினார்.பல நகரங்கலிருந்தும் எராளமான தமிழர்கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் இல்லத்து வரன்களை அறிமுகபடுத்தனர். மகாத்மா காந்தி சங்க மகளிர் அணியினர் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது.கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து கெட்டி மேளம் சங்க செயலாளர் திரு தெய்வபிரகாசம் மோட்டார் பைக்கில் உலகை சுற்றி வரும் திரு நாராயணன் என்ற இந்தியரை அறிமுக படுத்தினார். அவருடன் உரையாடிய போது தனக்கு 59 வயது என்றும் கடந்த 2015 ஆண்டு முதல் தனது மோட்டார் பைக்கில் 26 நாடுகளை கடந்து பிரான்ஸ் வந்துள்ளதாகவும் மேலும் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு வாழும் இந்தியர்கள் அன்புடன் வரவேற்று உதவி செய்வது தனக்கு ஊக்கம் அளிப்பதாக தெரிவித்தார். குடித்து விட்டு வாகனம் ஓட்ட கூடாது, பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்பயணம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.தொடர்ந்து ஒரு வருட காலம் பயணித்து பின் இந்தியா திரும்பி செல்லவிருப்பதாக தெரிவித்தார். ஸ்பெய்ன் செல்லும் அவருக்கு நிகழ்சியில் 510 யூரோக்கள் வழங்கப்பட்டது. வாழ்த்தவும் உதவவும் நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 0033752112445.திரு பாலசுப்ரமணியன் என்ற அன்பர் பங்கேற்ற அனைவருக்கும் புது வருட காலண்டர் வழங்கினார். துணை தலைவர் திரு சுகுமாரன் நன்றி உரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.
- நமது செய்தியாளர் ஜெயகௌரி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement