Advertisement

ஜெர்மனியில் மகரிஷி பரஞ்ஜோதியாருக்கு சிறப்பான வழியனுப்பு உபசாரம்

“ அனைவருக்கும் ஆரோக்கியம் – பிரபஞ்சம் முழுவதும் அமைதி “ என்ற நோக்கில் நாற்பத்து இரண்டு நாட்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஆன்மிக நல்லெண்ணச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்கயிலை எனும் பரஞ்ஜோதி நகர் உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் ஜெகத்குரு மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியாருக்கு ஜெர்மனி மியூனிச் விமான நிலையத்தில் அவர்தம் சீடர்கள் பெருமளவில் திரண்டு சிறப்பான வழியனுப்பு உபசார விழா நடத்தினர்.
குருமகான் மியூனிச், பிராங்போர்ட், ஸ்விட்சர்லாந்து முதலிய நகரங்களில் ஆழ்நிலை அகதவ சிறப்புப் பயிற்சி, ஞானசக்தி யோகா, ஜீவரக்க்,ஷா ஆழ்நிலை குண்டலினி யோகா முதலியவற்றை நடத்தி மக்கள் மாமனிதர்களாக உயர்ந்து தெய்வ நிலை அடைய தவப்பயிற்சி அளித்தார். இந்திய வம்சாவளியினரோடு பிற மொழி இனத்தவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத் தகுந்ததாகும். தமக்களிக்கப்பட்ட ஒத்துழைப்புக்கும், வரவேற்புக்கும், பயிற்சிகளை மேற்கொண்ட விதத்தையும் பாராட்டி வாழ்த்திப் பரிபூரண ஆசிகளை நல்கி குருமகான் தாயகம் புறப்பட்டார்.
- தினமலர் வாசகர் விஜய்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement