Advertisement

நைஜீரியாவில் நவராத்திரி வழிபாடு

லேகோஸ், நைஜீரியா: நவராத்திரி வழிபாடு கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி கலச ஸ்தாபனம் செய்து ஐசிஏ வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கொலு படி அமைத்து பொம்மைகளை அடுக்குவதிலிருந்து துவங்கியது. செப்டம்பர் 29ம் தேதியிலிருந்து துர்க்கை நாளொரு அலங்காரம் பூண்டு பக்தர்களை மணம் மகிழ வைத்தாள். இந்த ஆண்டு கோயில் குழுமம் மற்றும் அர்ச்சகர் ஶ்ரீ சிவகுமார் சிவாச்சாரியார் அம்பாளை யதார்த்த ரூபத்தில் அலங்கரித்து பக்த கோடிகளை மெய் சிலிர்க்க வைத்தனர்.

முதல் நாள் - தேங்காய் அலங்காரம்


இரண்டாம் நாள் - அருகம்புல் அலங்காரம்


மூன்றாம் நாள் - வெற்றிலை அலங்காரம்


நான்காம் நாள் - அஷதை அலங்காரம்


ஐந்தாம் நாள் - சிப்பி அலங்காரம்


ஆறாம் நாள் - மஞ்சள் அலங்காரம்


ஏழாம் நாள் - துர்க்கை அலங்காரம்


எட்டாம் நாள் - ஶ்ரீலட்சுமி அலங்காரம்


ஒன்பதாம் நாள் - சரஸ்வதி அலங்காரம்

நவராத்திரி முதல் நாள் கோவில் கொலு முன் அமர்ந்து திருமதி வித்யா ஆனந்தனிடம் கற்ற 10 வயதிற்கு உள்ளான குழந்தைகள் ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்து அம்பாள் கடாஷத்தை பிரதிபலித்தனர். திருமதி முத்துலட்சுமி முருகேஷ் அவர்களிடம் ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் கற்ற லேகோஸ் தேவியர்கள் 9 நாளும் பாராயணம் செய்தனர்.

விஜய தசமி நாளன்று புதிதாக பள்ளி துவங்கபோகும் குழந்தைகளுக்கு அஷராப்யாசமும் செய்தனர்.

நவராத்திரி முழுவதும் கண்ணிற்கு துர்க்கை காட்சியும் நாவிற்கு சுவையான பிரசாதங்களும் அற்புதமாக ஏற்பாடு செய்திருந்த கோவில் குழுமத்திற்கு பக்த கோடிகள் நன்றி தெரிவித்து நவராத்திரி கோலாகலத்தை இனிதே நிறைவு செய்தனர்.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement