Advertisement

சிங்கப்பூரில் தனிநாயக அடிகளார் நினைவு நாள் விழா

சிங்கப்பூர் திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம் உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் தமிழறிஞர் தனிநாயக அடிகளார் நினைவு நாள் விழாவை மிகச் சிறப்பாக நடத்தியது. ரோஷன் பரத் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. உமா தேவி சாந்தகுமார் மற்றும் பிரபஞ்சக் குடில் நடனக் குழுவினரின் நிகழ்ச்சிகள் சுவையூட்டின. தமிழர் பேரவைத் தலைவர் வே.பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத் தலைவர் முனைவர் பேராசிரியர் இரத்தின வேங்கடேசன் சிறப்புரை ஆற்றுகையில் தனிநாயக அடிகளார் அகநானூற்றுக் காதல் கதை – சங்க காலப் புலவர்களின் புலமை – திருக்குறள் – தொல்காப்பியம் போன்றவற்றின் தொன்மை – புதைந்து கிடக்கும் வாழ்வியல் தத்துவங்கள் முதலியவற்றைக் குறிப்பிட்டதுடன் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை அடிகளார் வலியுறுத்தியதை உணர்வுபூர்வமாக விளக்கினார்.
செல்வி மோனாலிசா அடிகளாரின் சாதனைகளைப் பட்டியலிட்டார். முன்னதாகத் தனித் தமிழ் ஆர்வலர் தமிழ்மறையான் வரவேற்புரை ஆற்றினார். திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement