என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
சவுதி அரேபியாவின் ஜெத்தா மாநகரில் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் மிகச்சிறப்பாக செயல்படும் தமிழ் அமைப்பாகும். தொடங்கிய ஆறு மாதங்களில் 5 நிகழ்ச்சிகளை தமிழ் மக்களுக்காக வழங்கி அனைவரின் இதயங்களிலும் நிரந்தர இடம் பிடித்துள்ளது. ஜெம்ஸ் என சுருக்கமாய் அழைக்கப்படும் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்ற வாரம் அஜீஜியா ஸ்டார் உணவக கூட்ட அறையில் நடந்தது. கூட்டத்திற்கு ஜெம்ஸ் ஒருங்கிணைப்பாளரும், நிறுவனருமான தஞ்சை ஜாஹிர் ஹூஷேன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் பணி செய்வர் என்றும் மார்ச் மாதம் மீண்டும் பொதுக்குழுவில் அடுத்த ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டு. இப்புதிய நிர்வாகிகள் மார்ச் 2021 வரை பொறுப்பில் இருப்பார்கள் என ஏகமனதாக அனைவரின் ஒப்புதலோடு தீர்மானிக்கப்பட்டது. ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் சென்ற வாரம் நடந்தது. அதில் சென்ற 6 மாதங்களாய் சிறப்பாக செயல்படுகின்ற 8 நிர்வாகக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு மேலும் 7 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். மேலும் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டு அனைவரின் சம்மதத்துடன் தமிழர் நலனுக்காக, தமிழின் வளர்ச்சிக்காக மற்றும் தனித்திறமை கொண்ட தமிழர்களை அங்கீகரிக்கவும் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவராக தஞ்சை இனியவன் என்கின்ற ஜாஹிர் ஹூசேன், துணைத்தலைவராக பாலைவன லாந்தர், செயலாளராக சத்யா சிவாஜி, துணைத்தலைவராக ஜாஃபர், பொருளாளராக ரஃபிக் உசேன், மக்கள் தொடர்பாளராக முகமது உமர் மற்றும் நிர்வாகக் குழுவினர்களாக திருமதி தீபா சத்யா, மருத்துவர் சாவித்திரி மணி,முனவர் ஷெரீஃப், உப்பிலி, லோகநாதன், திருமதி சுசீலா லோகநாதன், திருமதி விஜி சரன், ரமேஷ் மற்றும் முகமது இஸ்மாயில் ஆகியோரும் செயல்பாட்டாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஜெத்தா வாழ் தமிழ் மக்களை உலக தமிழ் மக்களோடு இணைக்கும் பாலமாக, சமகாலத்தில் வாழுகின்ற உலக தமிழ் எழுத்தாளர்களை இணைக்கும் பாலமாகவும், தமிழர் நலன் காக்கவும் உறுதி ஏற்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!