Advertisement

ஓமன் மாசிரா பகுதியில் இந்திய தூதருக்கு வரவேற்பு

மஸ்கட் : ஓமன் நாட்டின் மாசிரா பகுதிக்கு இந்திய தூதர் முனு மஹவர் வந்தார். அவருக்கு இந்திய சமூகத்தினரின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் இந்திய சமூகத்தினர் மத்தியில் உரை நிகழ்த்தினர். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். உரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இவை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இந்திய தூதர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். அங்குள்ள இந்திய பள்ளிக்கூடத்துக்கு சென்ற இந்திய தூதர் மாணவ, மாணவிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement