Advertisement

ஆஸ்திரேலியாவிலிருந்து 16 ஆம் நூற்றாண்டு நடராஜர் சிலை தமிழ்நாடு திரும்புகிறது

கான்பெர்ரா: தெற்கு ஆஸ்திரேலியா கலைப்பொருள் காட்சிக்கூட அறக்கட்டளையிடம், 2001 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த, 16 ஆம் நூற்றாண்டு நடராஜர் சிலை, தமிழ்நாட்டிற்கு திரும்ப வர இருக்கிறது. ஆலிவர் போர்ஜ் மற்றும் பிரண்டா லிஞ்ச் நிறுவனத்திடமிருந்து 2001 ஆம் ஆண்டு இந்த சிலையை கலைப்பொருள் காட்சிக்கூடம் வாங்கியது.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இந்த சிலை திருடப்பட்டது தொடர்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் அதை நிரூபிப்பதற்கான ஆவணங்களை, தெற்கு ஆஸ்திரேலியா கலைப்பொருள் காட்சிக்கூட அறக்கட்டளைக்கு அனுப்பினார். அந்த சிலையைத் திரும்ப ஒப்படைக்குமாறும் அவர் கேட்டிருந்தார்.

அந்த சிலையை முறைப்படி சட்ட ரீதியாகவே 2001 ஆம் ஆண்டு வாங்கியதாக தெரிவித்த கலைப்பொருள் காட்சிக்கூடம், அந்த சிலையைத் தற்போது திருப்பித் தர ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஆச்திரேலியாவுக்கான இந்தியத் துணைத்தூதர் கார்த்திகேயன் கடந்த ஒரு ஆண்டாக தெற்கு ஆஸ்திரேலியா கலைப்பொருள் காட்சிக்கூட அறக்கட்டளையுடன் பேச்சு நடத்தினார்.

தெற்கு ஆஸ்திரேலியா கலைப்பொருள் காட்சிக்கூட நிர்வாகி ஜேன் ராபின்சன் மற்றும் அவருடன் பணியாற்றும் ஒரு மூத்த அதிகாரி, இன்னும் ஓரிரு நாட்களில் டில்லி சென்று , இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி தலைமை இயக்குநரிடம் இந்த நடராஜர் சிலையை ஒப்படைப்பர். பின்னர் அது தமிழ்நாட்டைற்க் அனுப்பி வைக்கப்படும்.

- நமது செய்தியாளர் கோவிந்த் ராஜ்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement