Advertisement

புனித மதிநாவில் இந்திய ஹஜ் பயணிகளுக்கு வழியனுப்பு நிகழ்ச்சி

புனித மதிநா : சவுதி அரேபியாவின் புனித மதிநா நகரில் புனித ஹஜ் பயணத்தை சிறப்பான வகையில் நிறைவு செய்த இந்தியாவைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு இந்திய துணை தூதரகத்தின் சார்பில் உற்சாகமாக வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய துணை தூதர் நூர் ரஹ்மான் ஷேக், ஹஜ் கன்சல் அலுவலர் ஒய். ஷபிர் ஷா உள்ளிட்டோர் மதிநா விமான நிலையத்தில் உள்ள ஹஜ் முனையத்தில் அன்பளிப்புகளை வழங்கி சொந்த ஊருக்கு உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.அப்போது பேசிய ஹஜ் பயணிகள் சவுதி அரேபிய அரசாங்க ஒத்துழைப்புடன் புனித ஹஜ் பயணத்தை சிறப்பான வகையில் நிறைவேற்ற இந்திய துணை தூதரகம் நல்ல முறையில் ஏற்பாடுகளை செய்திருந்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement