Advertisement

கலிபோர்னியாவில் மகரிஷி பரஞ்சோதியார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை , தென்கயிலை எனும் பரஞ்ஜோதி நகர் , உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி பரஞ்ஜோதியார், 2020 - இல் உலக மாந்தர் அனைவரும் வளமும் நலமும் மகிழ்வும் நிறைவு பெறவும் , உலக மாந்தர் அனைவரும் அமைதி பெறவும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் ஆன்மிக நல்லெண்ணச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தின்கீழ் ஆகஸ்ட் 30 ஆம் தேதி கலிபோர்னியா சென்றடைந்தார் . விமான நிலையத்தில் அவர்தம் சீடர்கள் பெருமளவில் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர் .முப்பதாம் தேதி கலிபோர்னியா - சாந்தா கிளாரா ஶ்ரீ காளீஸ்வர்ர் ஆலய மண்டபத்தில் ,கலிபோர்னியா உலக சமாதான அறக்கட்டளை ஏற்பாட்டில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. உடல் - உள - உயிர் மேம்பாட்டுக்கு உதவி மனிதனை மாமனிதனாக்கி தெய்வ நிலைக்கு உயர்த்தும் ஜீவ ரக்சா பயிற்சி மற்றும் உயிர் , உயிரின் மூலம் ,உயிர் தாங்கி, உயிர் விளைவு என்ற இரகசியங்களை அனுபவ பூர்வமாகத் தெரிந்து கொள்ளவும் , அவற்றை மற்றவர்களுக்கு விஞ்ஞான - மெய்ஞான நுட்பங்களோடு எடுத்துக் கூறி மகரிஷி விளக்கமளித்தார் . கலிபோர்னியாவாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களோடு, பிற இனத்தவரும் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.ஆன்மிகப் பயணத்தில் , சுவிட்சர்லாந்தில், சூரிச் கம்பர் கழகம் - மதுரை காமராசர் பல்கலைக் கழக தமிழியல் துறை மற்றும் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இணைந்து சூரிச்சில் நடத்தும் முதலாவது உலக கம்பர் மாநாட்டிலும் கலந்து கொள்ளவிருக்கிறார். ஜெர்மனி - பிரான்ஸ் நகரில் நடைபெறும் நிகழ்வுகளிலும் தமது 42 நாள் பயணத்தில் பங்கேற்க உள்ளார்- தினமலர் வாசகர் வெ. உத்தமன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement