Advertisement

பிரான்சில் ஜென்மாஷ்டமி

பிரான்சில் ஜென்மாஷ்டமி என்னும் கண்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதி கூடிய ஆகஸ்ட் 23 ம் நாள் வெள்ளிக்கிழமை இங்குள்ள அனைத்து ஆலயங்களிலும் கிருஷ்ணன் பிறந்த தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரான்ஸ் சவினியில் அமைத்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மாலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.
இவை மட்டும்மின்றி பல இந்தியர்கள் வீடுகளிலும் மிக நேர்த்தியான முறையில் கிருஷ்ணனுக்கு பிடித்த இனிப்பு, கார வகைகள் குறிப்பாக சீடை போன்றவைகளுடன் துளசி வைத்து பூஜை நடத்தினார்கள். பின் யாவருக்கும் அதிலும் சிறுவர் சிறுமிகளுக்கு பிரசாதமாக வழங்கினார்கள். யாவரும் கண்ணன் மற்றும் கிருஷ்ணனின் பக்திப்பாடல்களை பாடி மகிழ்ந்தார்கள். ரேணுகானம் காதில் ஒலித்துக்கொண்டே இருந்த தருணத்தில் கண்ணனையும் கிருஷ்ணனையும் மனதில் நினைத்துக்கொண்டு சென்றார்கள்.
- நமது செய்தியாளர் முத்துக்குமரன்

p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 12.0px 'Tamil Sangam MN'; color: #454545} span.s1 {font: 12.0px 'Helvetica Neue'}

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement