Advertisement

பிரிஸ்பேனில் ‘சக்தி’ - பரத நாட்டிய நிகழ்ச்சி

பிரிஸ்பேனிலிருந்து இயங்கி வரும் லலிதகலாலயா நாட்டியப்பள்ளி, ‘சக்தி’ என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியொன்றை கடந்த 10 ஆகஸ்ட் 2019 அன்று மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த்து. நிகழ்ச்சியும் அப்பர் மவுண்ட் கிராவட் பகுதியிலுள்ள புனித க்ளெய்ர்வாக்ஸ் மெக்கில்லாப் பள்ளி அரங்கில் நடைபெற்றது.
சின்னஞ் சிறுமிகள் முதல் பல்வேறு வயதுகளில் சுமார் 120 மாணவியர் பங்கெடுத்த இந்நிகழ்ச்சியில், நாட்டியப்பள்ளியின் ஆசிரியை பத்மலட்சுமி ஶ்ரீராமும் மாணவர்களுடன் கூடவே நடனமாடி நிகழ்ச்சியை சிறப்புறச் செய்தார். ‘சக்தி’ நாட்டிய நாடகம் நிகழ்ச்சியின் சிறப்பம். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இந்திய துணைத்தூதர் திருமதி அர்ச்சணா சிங், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஆன்டனி சார்ட்டன், கவுன்சிலர்கள் ஜோநாதன் ஶ்ரீ, ஸ்டீவன் ஹுவாங் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். கவுன்சிலர் ஸ்டீவன் ஹுவாங் தனது உரையில், மொழியையும் கலையையும் போற்றிப்பாதுகாக்கும் இந்த உன்னத முயற்சிக்கு தமது ஆதரவு எப்பொழும் உண்டு என்றும், இக்கலையை பிரிஸ்பேன் நகரலளவில் மக்களுக்கு அறியப்படுத்துவதற்கு ஆவண செய்யஇருப்பதாகவும் உறுதியளித்தார்.


நிகழ்ச்சியில் பங்கெடுத்த மாணவியர்களுக்கும், கடந்த ஆண்டில் திறம்பட செயல்பட்ட மாணவியர்களுக்கும் கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

- நமது செய்தியாளர் ஆ சோ ரெங்கநாதன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement