Advertisement

மியன்மார் ஆலயங்களில் மத நல்லிணக்கம்

மியன்மார் ஆலயங்கள் மத நல்லிணக்கச் சின்னங்களாக விளங்குகின்றன. ஆன்மிகம் மக்களை அன்பால் இணைக்கும் காட்சிகளை யங்கூனில் காண முடிகிறது. இந்துக் கோயில்களில் பர்மியர்கள் பலர் வழிபடுவதைக் காணலாம். இந்துக்களைப் போலவே பர்மியர்களும் தேங்காய், பழ அர்ச்சனைத் தட்டுடன் ஆலயம் வந்து வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இதே போல் புத்த விகார்களில் இந்துக்கள் பர்மியர்களைப் போலவே வணங்கி வழிபாடுகளில் கலந்து கொள்ளுவதைக் காணலாம். யங்கூன் கபாயெ புத்த பிக்குகளுக்கான நன்கொடை விழாவுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. இங்கே பர்மிய புத்த மதத்தினரோடு இந்துக்களும் பெருவாரியாகக் கலந்து கொண்டதைக் கான வியப்பு மேலிட்டது. முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்த இவ்விழாவில் காய்கறிச் சாப்பாட்டை வட்ட மேசை அமைத்து அனைவரும் ஒன்றாகத் தரையில் அமர்ந்து விருந்துண்ட காட்சி மெய் சிலிர்க்க வைத்தது.

இந்தியப் பெண்கள் நமது பாரம்பரிய உடையில் வந்து “ புத்தம் சரணம் கச்சாமி – சங்கம் சரணம் கச்சாமி “ எனத் தமிழில் முழக்கமிட்டு வழிபட்ட பரவசம் மிக்க காட்சி புத்த மத பர்மியர்களும் இந்து மத இந்தியர்களும் ஆலயங்களில் ஒன்றுபட்டு நல்லிணக்கத்தோடு வழிபட்டது ஆலயங்களில் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக தனிச் சிறப்புடன் விளங்குவதற்கு சாட்சியாக அமைந்தது..

- தினமலர் வாசகர் விஜேஷ்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement