Advertisement

இந்தோனேஷியா ஆலய மண்டலாபிஷேக விழா

இந்தோனேஷியா – சுமித்ரா பகுதியில் உள்ள மேடானில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் கடந்த ஜீன் திங்கள் 23 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. 48 நாள் மண்டலாபிஷேகம் பக்தி இசைக் கச்சேரிகள் – ஆன்மிகச் சொற்பொழிவுகள் என நடைபெற்று மண்டலாபிஷேகப் பூர்த்தி விழா சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத் தலைமை அர்ச்சகர் சர்வசாதகம் டாக்டர் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் 108 கலசங்கள் அமைக்கப்பட்டு சதாஷ்டகத் திருமஞ்சனம் என வைகானஸ ஆகம முறைப்படி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றிய ஸ்ரீநிவாச பட்டாச்சார் பக்தி நெறியில் ஈடுபட்டுள்ள இப்பகுதி ஆன்மிக அன்பர்களைப் பாராட்டி வாழ்த்தியதுடன் தங்கள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டுகோள் விடுத்தார். இல்லங்களில் தமிழிலேயே பேச வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். சிங்கப்பூர் ஆன்மிகச் செம்மல் ஆறுமுகம் – சாந்தி தம்பதியினர் இவ்விழா விமரிசையாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேய சுவாமியின் அருள் பெற்றுச் சென்றனர்.

- தினமலர் வாசகர் பாலாஜி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement