Advertisement

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் ஆய்த எழுத்து தமிழ் இலக்கிய களம் ஆரம்ப விழா

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் ஆய்த எழுத்து தமிழ் இலக்கிய களம் ஆரம்ப விழா நேற்று சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா மாநகரில் அஜீஜியா, மனாரத் அங்காடி ஸ்டார் உணவக கூட்ட அரங்கில் நடந்தது. தமிழுக்காக... தமிழர் நலனுக்காக, உள்ளுர் தமிழ் மக்களை உலகத் தமிழ் மக்களுடன் இணைக்கும் ஓர் பாலமாக, தமிழ் எழுத்தார்வத்தை தூண்டவும், சமகால முற்போக்கு சிந்தனையாளர்களை, உலகத் தமிழ் எழுத்தாளர்களை இணைக்கும் பாலமாகவும் செயல்பட ஆய்த எழுத்து தன் பயணத்தை தொடங்கியது.முதலில் நம் தாய்தமிழில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஜெத்தா முத்தமிழ்ச் சங்க நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் ஆலோசகர் தஞ்சை இனியவன் என்கின்ற லயன் ஜாகிர் உசேன் வரவேற்புரை நிகழ்த்த... ஜெத்தா தமிழ் சங்கத்தின் முன்னோடி தலைவர்கள் சிராஜ் பாய், மோகன் ஐயா - மல்லப்பன் ஆகியோர் தங்கள் கரங்களால் #ஆய்தசுஎழுத்து பதாகையை திறந்து வைக்க... முற்போக்கு சிந்தனையாளரும் எழுத்தாளருமான காயல் பாலைவன லாந்தர் என்கின்ற நழிஜத் ஜாஃபர் அவர்கள் ஆய்த எழுத்தை தமிழ் நெஞ்சங்களுக்கு அறிமுகம் செய்தும், விளக்கவுரையும் கொடுத்தார்.

ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் தாயிஃப் நகர புகழ் சகோதரர் அஹமது பாஷா அவர்கள் 'எனக்குப் பிடித்த எழுத்தாளர்ள) எனும் தலைப்பில் புத்தக வாசிப்பின் நன்மைகளை பட்டியலிட்டு உரை நிகழ்த்தி மக்கள் மனதை புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்துக்கு திருப்பினார். பட்டிமன்ற பேச்சாளர் திருமதி அஜிதா சலீம் அவர்கள் 'பாரதி கண்ட புதுமைப் பெண்' எனும் தலைப்பில் புயலென பேசி... சூறாவளியாய் ஓர் உரை நிகழ்த்தி சுனாமியாய் அரங்கத்தினர் மனதை கவர்ந்து சென்றார்.
நிறைவாக பேச வந்த ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் நிர்வாககுழு உறுப்பினர் மருத்துவர் சாவித்திரி மணி அவர்கள் 'புத்தகம் என் தோழமை' எனும் தலைப்பில் தென்றலாய் தாலாட்டி, வளரும் தலைமுறையினருக்கு பரிசாக புத்தகங்களை பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளுக்கு கொடுத்து வாசிப்பின் அவசியத்தை உணர்த்துங்கள் என பேசி மனதை கொள்ளை கொண்டார். ஜெத்தா தமிழ்ச் சங்க செயல்வீரர் சிராஜூதீன் அவர்களுக்கு புத்தகம் பரிசளித்து பாராட்டி மகிழ்ந்தார். நிகழ்ச்சியில் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம், ஜெத்தா தமிழ்ச் சங்கம், நம் நாடு, ரோஜாக் கூட்டம், மெஃப்கோ, தமுமுக மற்றும் மக்கள் சேவை குழுமங்களின் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் மூத்தவர்கள் சிராஜுதீன், மோகன், மல்லப்பன், பேரரசு, த.மு.மு.க பிரமுகர் அப்துல் மஜீது வாழ்த்துரை வழங்க... முடிவில் ஜெம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் முகமது உமர் நன்றி நவிழ்ந்தார்.
நி கழ்ச்சியினை ஜெத்தா முத்தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஜாஃபர், ரஃபிக் ஹூசேன், முனவர் ஷெரீஃப் உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பேச்சாளர்களுக்கு பாலைவன லாந்தர் எழுதிய 'லாடம்' புத்தகங்களை நினைவு பரிசாகவும், பூங்கொத்து கொடுத்தும் கௌரவிக்கப் பட்டனர். நிகழ்வில் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சிராஜ்பாய், மோகன் ஐயா, மல்லப்பன், அஹமது பாஷா, பேரரசு, ராமானுஜம், ரமணா, மெஃப்கோ இப்ராஹிம், குலாம், தமுமுக அப்துல் மஜீது, ரோஜாக்கூட்டத்தின் விமல், ராஜசேகர், கோட்டி, ஜெயக்குமார், லோகநாதன், அழகு, நரேஷ், பூஜா, பட்டிமன்ற பேச்சாளர் அஜிதா சலீம், சலீம், நாஃப்கோ தம்பிகள் உப்பிலி, ஜமான், ரித்வான், நாஃப்கோ தமிழ் நண்பர்கள் குழு, ராம்நாடு தமிழ் நட்புகள், மக்கள் சேவை குழும நட்புகள் ரமேஷ், திரிலோகி மன்சூர், மணிகண்டன், நூர்முகமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை தஞ்சை இனியவன் எ லயன் ஜாஹிர் உசேன் தொகுத்து அளித்தார்.
- தினமலர் வாசகர் ஜாஹிர் உசேன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement