Advertisement

அமெரிக்காவின் அன்னபூரணர்கள்

கையில் அன்னப்பாத்திரமும் சிறு கரண்டியும் பிடித்த அன்னபூரணி- பராசக்தி என நாம் அறிந்ததே. அதனால் தான் நாம் வீடுகளில் வைத்து பூஜிக்கின்றோம். அந்த அன்னப்பூரணியே ஆண்கள் வடிவில் அன்னபூரணர்களாக சிறு தட்டிலோ, பாத்திரத்திலோ அன்றி, ஒரு பெரிய வாகனம் முழுதும் உணவெடுத்துக் கொண்டு தினம்தினம் உணவளிக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக உள்ளதல்லவா?.உணவு அளிப்பதோடு அல்லாமல் ஆயிரக்கணக்கில் மரம் நடுதலும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது ! முக்கியமாக மரக்கன்றுகள் வளர்த்து, அதனை இலவசமாய்கொடுக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் குறிச்சிப்பாடி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் தான் அந்த அதிசயம் நடக்கிறது. உதாரணமாக பெரியக்குறிச்சி,மந்தாரக்குப்பா. அங்கும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும்ஏழை எளிய மக்களுக்கும், ஊரில் உள்ள வீடற்ற ஏழ்மைநிலையில் வாழும் மக்களுக்கும், ஆதரவற்றோருக்கும் ஒரு உணவு வாகனம் தினம் தினம் சென்று உணவளித்து வருகிறது. உணவு மட்டுமே அல்லாமல், துணிமணிகள் வழங்குதல்,காலணிகள் வழங்குதல் போன்ற பலநற்செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
தவிர, பேருந்து நிறுத்தங்களில் தினமும் சந்திக்கும் எத்தனையோ ஏழை மக்களுக்கும்உணவு அளித்து வருகின்றனர். 100 நாட்கள் தினக்கூலித்திட்டத்தில் உழைக்கும்எளியோருக்கும் உணவளித்து வருகின்றனர்.

அதெல்லாம் சரி, தினம் தினம் உணவளிக்க ஆகும் செலவை யார் செய்கிறார்கள்? என்னும் ஆச்சரியத்தோடு அந்தப் புண்ணியவான்களைக் கேட்டறிந்தோம்.டெக்சாஸ்- சான் ஆண்டோனியோவிலும்,அமெரிக்காவின் பிற மாநிலங்களிலும் வசிக்கும் வசிக்கும் திரு.சுப்பையா இவானி, திரு.துரைப்பாண்டியன் சதானன், திரு.வெங்கடவேதகிரி, திருமதி.ஐஸ்வர்யா லக்ஷ்மி, திரு.சுவாமிநாதன் ஐயர், திரு.சரவணன் வீரப்பன், திரு.ஸ்ரீராம் பிரசாத், திரு.இராமலிங்கம், திரு.ராஜ்குமார், திரு.திருமலை, திரு.வெங்கடேஷ், திரு.லோகநாதன், திரு.அருண்குமார், திரு.பிரமோத் மற்றும் திரு.விக்ரம் ஆகியோர் தான் அந்த அன்னபூரணி மற்றும் அன்னபூரணர்கள் !
கடந்த ஏப்ரல் மாதத்தில் துடங்கியது தான் இந்த வாகன சேவை. தங்கள் இல்லங்களின் விஷேச தினங்களில் நல்லகாரியங்கள் ஏதேனும் செய்ய வேண்டும் எனும் நல்ல எண்ணத்தில் உருவானது தான் இத்திட்டம்.
திட்டம் இடுதலும், பணம் கொடுத்தலும் தயார்நிலையில் இருந்தாலும், அதனை நம்பிக்கையுடனும்,நேர்மையுடனும் செயலாற்ற நல்ல மனிதர்களும் வேண்டும் அல்லவா?
அப்படிக் கிடைத்த மனிதர்கள் தான் குறிச்சிப்பாடியை சேர்ந்த திரு. ராஜீவ் காந்தி, திரு. ராஜேஷ் மற்றும் ஒரு அருமையான தன்னார்வலர் குழுவும். இயற்கையாகவே இவர்கள் தங்களால் முடிந்த அளவு சேவைகள் செய்து வந்தனர்.

ஜீவகாருண்யத்தில் மிகுந்த அக்கறைகொண்ட மனிதர்கள். இம்மனிதர்களுடன் ராம் அவர்கள் தொடர்பு கொண்டு, அதனை மேலும் விரிவு படுத்தி, அமெரிக்க அன்னபூரணர்களுடன் இணைந்து ஒரு நான்கு சக்கர வாகனம் வாங்கி கொடுத்து, மேலும் பல நல்ல மனிதர்களையும் இதில் இணைத்தும், உணவின் அளவை அதிகரித்தும் பேருதவி புரிந்து வருகிறார்கள்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு, இங்குள்ள கருங்குழி கிராமத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும், சூரிய ஒளி மின்விளக்குகள் அமைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
சீரிய செயல்கள் புரிந்து வரும் இவர்களுக்கு தினமலர் சார்பாக வாழ்த்துக்கள் !

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rajalakshmi - Kuwait City,குவைத்

    நல்ல செய்தி. மிக்க மகிழ்ச்சி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement