Advertisement

தமிழ்நாடு பவுண்டேஷன் ஹூஸ்டன் பகுதி தந்தையர் தின விழா

தமிழ்நாடு பவுண்டேஷன் ஹூஸ்டன் பகுதி சுகர்லேண்ட் மெமோரியல் பூங்காவில் தந்தையர் தின விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது. அலுவலகப் பொறுப்பாளர்களும் ஆலோசனை குழு உறுப்பினர்களும் அவரவர் குடும்பத்துடன் காலை 10 மணிக்கே பூங்காவிற்கு வந்து விழா ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். பங்குகொள்ள வந்தவர்களில் சிலர் மதிய உணவு வகைகள் ஆடியோ வீடியோ இன்னும் பிற தேவைகளையும் மேலும் உடற்பயிற்சி கருவியையும் தவறாது எடுத்து வந்தனர்.தமிழ்நாடு பவுண்டேஷன் ஹூஸ்டன் பகுதி தலைவர் மாலா கோபால் வரவேற்புரையை நன்றே நடத்தினார். அடுத்து செயலாளர் டாக்டர் நளினி பாலச்சந்திரனும், பொருளாளர் புனிதா தங்கராஜிடம் அறக்கட்டளையின் பல்வேறு பொறுப்புகளையும், அதற்குரிய அங்கத்தினர்களையும் ,உறுப்பினர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். இவ்வமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் சேவையை தலைவர் மாலா பெரிதும் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் எஸ்.ஜி அப்பன், ஹூஸ்டன் நாடகமணி அனந்தகிருஷ்ணன், சென்னை ஜெகதீசன் ஆகிய மூவரும் ஆலமரம் அப்பா என்று சிறப்பிக்கபட்டனர். ஆலமரம் மிக விரிந்து, உயர்ந்து, நிழல்கள் தந்து, விழுதுகள் பல பூமியில் விட்டு சமூகத்திற்கு தொண்டாற்றுகின்றது. அதற்கு நிகராக இம்மூவரும் முன்னோடியாக சிறப்பிக்கப்பட்டனர். இந்த விழாவில் பல ஹூஸ்டன் அன்பர்கள் பாட்டு பாடி மற்றவர்களை மகிழ்வித்தனர். குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை அமைப்பு தன்னிலையாகவா அல்லது பெற்றோர்களின் முழு வழிகாட்டுதலா என்ற தலைப்பில் அரட்டை அரங்கம் வெகு விறுவிறுப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்கியது பெரிதும் வெற்றியையும் வழங்கியது. பாட்டும், மகிழ்ச்சியும், அரட்டை அரங்கம் குதுகலமும், கலந்ததாக அமைந்தது இந்த ஆலமரம் தந்தையர் தின விழா.
- தினமலர் வாசகர் தங்கராஜ் பேச்சியப்பன்


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement