Advertisement

திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 41 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 41 ஆவது தலைவராக ஆ. உதயராஜன் அவர்கள் பதவி ஏற்க்கும் நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் 07.07.2019 - ஞாயிற்று கிழமை அன்று இடம் பெற்றது.

இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் அருட் தந்தை லக்ஷ்மன் பீரிஸ், கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். அவரது காலத்தில், திருகோணமலை ரோட்டரி கிளப் ஆளுநர் இருந்து 4 விருதுகள் கிடைத்ததாகவும் அதட்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார்.

செயலாளர் ரகுராம் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நா மணிவண்ணன் - கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் கலந்து கொண்டார். இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் அருட் தந்தை லக்ஷ்மன் பீரிஸ் புதிதாக தெரிவான தலைவர் ஆ.உதயராஜனுக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.. புதிய அங்கத்தவராக திரு உதயண்ணன் அவர்கள் இணைத்துக் கொள்ளப்படார்.

பிரதம விருந்தினர் அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாக பாராட்டினார். சரியான தேவையுள்ள மக்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் இளைனர்களுக்கான தேவைகளையும் அவர்களுடைய பிரச்சனைகளையும், முக்கியமாக போதை மருந்து பாவனை பற்றி கவனம் செலுத்துமாறு வேண்டிக் கொண்டார்

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement